← Back to list
PICKids: முதல் தடுப்பூசிக்கான கடைசி நாள் மே 15!
Apr 14, 2022
PICKidsசின் கீழ், 5 முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு மே 15ஆம் தேதி வரை மட்டுமே COVID-19க்கான முதல் தடுப்பூசி போடப்படும்.
மே 16ஆம் தேதிக்குப் பிறகு அச்சலுகை வழங்கப்படாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அப்படியே அவ்வயது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட வேண்டுமென்றால், பெற்றோர்கள், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று, கட்டணம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சு கூறியது.
அத்தடுப்பூசிகளுக்கான கோரிக்கை குறைந்து வருவதால், இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் முதல் தடுப்பூசிகள் காலாவதியாகி, விரயமாவதை தடுக்க அக்காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்னும் தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருக்கும் பெற்றோர் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அமைச்சு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வேளையில், 2017ஆம் ஆண்டு பிறந்து இவ்வாண்டு மே 15ஆம் தேதிக்குள் இன்னும் ஐந்து வயதை எட்டாத சிறார்களுக்கு, இம்முடிவு பொருந்தாது என்றும் அமைச்சு கூறியது.
சம்பந்தப்பட்ட சிறார்களுக்கு, MySejahtera செயலி வாயிலாக பதிந்துக் கொண்டு, தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்; அதற்கான விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சு தெரிவித்தது.
மற்றொரு நிலவரத்தில், தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட ஏற்கனவே MySejahteraவில் பதிந்து விட்டு இன்னும் அத்தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் பிள்ளைகளின் பெற்றோரை சுகாதாரப் பணியாளர்கள் தொடர்புக் கொள்வார்கள் என்றும் அமைச்சு தெரிவித்தது.
நாட்டில் தற்போது, 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் இதுவரை 38 புள்ளி ஏழு விழுக்காட்டினர் COVID-19க்கான முதல் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அதே வயதுடைய சிறார்களில், 6 புள்ளி 5 விழுக்காட்டினர் அதாவது 2 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather