← Back to list
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!
Nov 19, 2021
நாளை மலாக்கா மாநில சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு 217 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்படுகின்றன.
வாக்களிப்பு சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்ய 12 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றவிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு காலை 8 மணியில் இருந்து மாலை ஐந்தரை மணி வரை நடைபெறும்.
நாளை மலாக்கா மாநில சட்ட மன்றத் தேர்தலில் நான்கு லட்சத்து எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மற்றொரு நிலவரத்தில், தேர்தலின் போது வரம்பு மீறி சினத்தைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்புக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதோடு பொது பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு மருட்டலாக இருக்கும் விஷயங்களை எதிர்கொள்ள Bukit Amanனின் உதவியுடன் தயாராகி விட்டதாகவும் அது கூறியது.
இவ்வேளையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அது வாக்காளர்களுக்கு உத்தரவாதம் வழங்கியது.
நாட்டில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக புதிதாகப் பதிவாகியுள்ள கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டியுள்ளது.
புதிய சம்பவங்களின் எண்ணிக்கை சற்று சரிந்து ஆறாயிரத்து 355 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றை விட அது 25 சம்பவங்கள் குறைவாகும்.
வாகனங்களில் ஆளின்றி தத்தம் பிள்ளைகளை அலட்சியமாகத் தனியே விட்டுச் செல்லும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம் என அரச மலேசிய காவல் துறை எச்சரித்துள்ளது.
அவ்விஷயத்தில் காரணங்கள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படாது; அனுசரணையும் காட்டப்படாது என PDRM தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather