Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Autism என்பது குறையல்ல- ரஷ்வினின் தந்தை!

Oct 05, 2021


autism என்பது குறையல்ல- ரஷ்வினின் தந்தை!

Autism எனப்படும் மதியிறுக்கமுடைய குழந்தைகளை ஒரு போதும் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம்!

நல்ல பயிற்சி இருந்தால் சாதாரண குழந்தைகள் போலவே, சொல்ல போனால் அவர்களை விட இன்னும் திறமையானவர்களாக வரக்கூடிய ஆற்றல் Autism உள்ள குழந்தைகளுக்கு இருக்கின்றது என்கிறார், சமீபத்தில் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் K. Rashwin-னின் தந்தை காளிதாஸ்.

ஒன்பது நிமிடங்கள், 54 விநாடிகளில் 198 நாடுகளின் கொடியைச் சரியாகக் கண்டிபிடித்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற Rashwin-னின் திறமையை, தாம் அறிந்து தருணம் குறித்து நம்மிடம் காளிதாஸ் நம்மிடம் பேசினர்.

" ரஷ்வினின் ஆற்றலை நாங்கள் அவருக்கு இரண்டு வயது இருக்கும் போது கண்டறிந்தோம், வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் மீது அவருக்கு இருந்த ஆர்வம் கொடிகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தது.

பட அகராதியைப் பயன்படுத்தி அவரது அந்த ஆர்வத்தை நாங்கள் ஊக்குவித்தோம். பின்னர் தான் எங்களுக்குத் தெரிய வந்தது ரஷ்வினின் ஞாபக சக்தி அதிகமாக இருக்கின்றது என்பது.

அவருக்கான சிறப்புப் பள்ளியில் அவரை சேர்த்து, அவரது ஆற்றலை ஊக்குவிக்க ஏதுவான முயற்சிகளை நாங்கள் எடுத்தோம். ரஷ்வினை எங்கள் உலகிற்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அவரது உலகிற்கு நாங்கள் சென்று, அவரது திறமைகளை மேம்பட வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தோம்.'' என்றார்.

திறமையைக் கண்டறிந்தாலும் Rashwin-னைப் போன்ற குழந்தைகளை வழிக்குக் கொண்டு வந்த ஒரு விஷியத்தை போதிப்பது சவாலான ஒன்று என்றார் காளிதாஸ். 

அந்த சூழலைத் தாம் கையாண்ட விதம் குறித்தும் அவர் பேசினார்.

autism என்பது குறையல்ல- ரஷ்வினின் தந்தை!

" ரஷ்வினால் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இருக்க முடியாது, அது எங்களுக்குச் சவாலாக அமைந்தது. அவரது ஆசிரியருடன் உதவியுடன், ஒரு விஷியத்தில் அவரது ஆர்வத்தை நீண்ட நேரம் எவ்வாறு தக்க வைப்பது போன்றவற்றை நானும் எனது மனைவியும் கற்றுக் கொண்டோம்.

ஏறக்குறைய பத்து நிமிடங்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து கொடிகளின் பெயர்களைக் கூறுவதென்பது சற்று சவாலான ஒன்று, ஆனால் நாங்கள் எதிர்ப்பார்த்தை விட ரஷ்வின் இன்னும் அதிகமான கொடிகளை அடையாளம் கண்டு எங்களை ஆச்சர்யப்படச் செய்தார்" என காளிதாஸ் கூறினார்.

சரியான யுக்தியுடன் கூடிய பயிற்சிகள் தான் Rashwin-னின் இந்த சாதனைக்குத் தூணாக விளங்கியது என காளிதாஸ் சொன்னார்.

Autism குறைபாடு உடைய குழந்தைகள் சாதாரண குழந்தைகளைக் காட்டிலும் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather