← Back to list
இளையோருக்கு Sinovac தடுப்பூசி போட அனுமதி!
Oct 01, 2021
12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்கு Sinovac வகை Covid19 தடுப்பூசியைப் போட சுகாதார அமைச்சு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது!
ஒவ்வாமை, இதர சுகாதாரப் பிரச்னைகள் காரணமாக Pfizer வகை தடுப்பூசியைப் பெற முடியாத இளையோருக்கு, Sinovac தடுப்பூசி போடப்படும் என சுகாதார தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
இதற்கு முன், இளையோருக்குப் போட Pfizer தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.
-----
வெறும் வயிற்றில், கோவிட் 19 தடுப்பூசி போட செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு குறிப்பாக இளையோருக்கு மீண்டும் நினைவுறுத்தப்பட்டுள்ளது!
அதே சமயம், தடுப்பூசி போட்ட பிறகு தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்திய சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin, ஒரு வாரத்திற்கு கடுமையான வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
மலாக்காவில், உணவு உண்ணாமல், போதுமான உறக்கமில்லாமல் தடுப்பூசி போட சென்ற 12 வயது சிறுவன், தடுப்பூசி போட்டு விட்டு வீடு திரும்பும் முன் மயங்கி விழுந்த சம்பவத்தை அடுத்து அமைச்சர் அவ்வாலோசனையை வழங்கியிருக்கிறார்.
அச்சிறுவனின் உடல் நிலையை மாநில சுகாதாரத் துறை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
------
பொதுச் சேவை துறை ஊழியர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது சரியான முடிவு.
அதே விதிமுறையைத் தனியார் துறைகளிலும் அமுல்படுத்தினால் தொற்று அபாயத்தை இன்னும் சுலபமாகக் கட்டுப்படுத்த முடியும் என, மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
-----
நாட்டிலுள்ள பெரியவர்களில் 86.3 விழுக்காட்டினர் கோவிட் 19 தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.
நேற்று மட்டும் மூன்று லட்சத்து 29 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டன.
-----
நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியுள்ள மக்களவை - மேலவை உறுப்பினர்கள், வழக்குகள் முடியும் வரை நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்ய ஆராயப்படுகிறது!
நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான சிறப்புக் செயற்குழுவின் நேற்றையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களில் அதுவும் ஒன்று என மேலவைத் தலைவர் Tan Sri Dr Rais Yatim தெரிவித்துள்ளார்.
நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருப்பவர்களில், முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak, UMNO தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi, DAP பொதுச் செயலாளர் Lim Guan Eng, இளைஞர் விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் Syed Saddiq-கும் அடங்குவர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather