← Back to list
சுற்றுப் பயணிகள் வருகை 83.4% சரிவு!
Sep 23, 2021
கோவிட் 19 காரணமாக கடந்தாண்டு மலேசியாவுக்கு வந்திருந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட 83.4 விழுக்காடு சரிந்துள்ளது.
2019ஆம் ஆண்டு இரண்டு கோடியே 61 லட்சம் சுற்றுப் பயணிகள் வருகையளித்திருந்த நிலையில், கடந்தாண்டு வெறும் 41 லட்சம் பேர் மட்டுமே வந்திருந்ததாக புள்ளி விவரத்துறை தெரிவித்திருக்கின்றது.
------
நாட்டில் இன்று புதிதாகப் பதிவாகியுள்ள கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை சரிவு கண்டுள்ளது.
புதிதாக 13 ஆயிரத்து 754 கோவிட் 19 சம்பவங்கள் இன்று பதிவாகியுள்ளன.
ஆக அதிகமாக சிலாங்கூரில் ஆயிரத்து தொள்ளாயிரத்து 85 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
-----
நாடெங்கிலுமுள்ள மருத்துவமனைகளில் கட்டில்களின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவு ICU வார்ட்டுகளின் பயன்பாடும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அது கூறியது.
------
நாடு முழுவதும் 12டில் இருந்து 17 வயதுடைய 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளையோருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
சபாவில் மிக அதிகமாக 56 விழுக்காட்டு இளையோர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
-----
கேமரன் மலைக்குச் செல்லும் Jalan Simpang Pulai- Blue Valley வழியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், உள்ளூர் சந்தைகளில் காய்கறி கையிருப்பு பாதிக்கப்படவில்லை என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.
மாற்றுப் பாதை வழியாக கேமரன் மலையிலிருந்து நாடெங்கிலுமுள்ள விநியோக மையங்களுக்குக் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக அது அறிக்கை வழி தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather