← Back to list
தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்குப் பொறுப்புண்டு!
Sep 22, 2021
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு எம்மாதிரியான பொறுப்புகளைக் கொடுக்கலாம் என்பது மீதான அணுகுமுறையைக் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது!
இதுவரை நாட்டில் ஏறக்குறைய ஈராயிரம் ஆசிரியர்கள் தடுப்பூசி போட முன்வரவில்லை; அதற்காக அவர்கள் தங்களின் பணியைத் தொடர முடியாது என அர்த்தமாகாது என அமைச்சர் Datuk Dr Radzi Jidin மக்களவையில் குறிப்பிட்டார்.
பள்ளிகளின் பின்புலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கென சில பொறுப்புகள் வழங்கப்படும் என அவர் தெளிவுப்படுத்தினார்.
தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளி நேரடி வகுப்புகள் தொடங்கியதும் மாணவர்களுக்குப் பாடம் போதிக்க அனுமதி இல்லை என கல்வியமைச்சு கூறியிருந்தது;
இந்நிலைபாடானது ஆசிரியர்களுக்குச் சுமையாகி விடுமா என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.
-----
நெகிரி செம்பிலானிலுள்ள மொத்தம் ஏழாயிரத்து 200க்கும் அதிகமான பொதுச் சேவை துறை ஊழியர்களில் 64 பேர் கோவிட் 19 தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் தடுப்பூசியின் அவசியம் குறித்து அவர்களுக்கு வேண்டிய அலோசனைகளை எடுத்துரைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக மாநில MB தெரிவித்தார்.
------
பேராவில் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடனடியாக அருகிலுள்ள PPV-யில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
MySejahtera-வில் பதிந்து கொண்டிருப்பவர்கள் தேதிக்காகக் காத்திருக்க வேண்டாம் என மாநில MB தெரிவித்துள்ளர்.
மாநிலமெங்கிலுமுள்ள 22 தடுப்பூசி மையங்களிலும் Walk-இன் முறையில் சென்று அவர்கள் தடுப்பூசி போடலாம் என்றாவர்.
------
பினாங்கில் முறையான ஆவணம் இல்லாத அந்நிய தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
SPICE Convention Centre, Millennium மண்டபம், SP Arena மற்றும் Sungai Bakap பல்நோக்கு மண்டபம் ஆகிய நான்கு தடுப்பூசி மையங்களில் மட்டும், முன்பதிவு இல்லாமலேயே அச்சேவைப் பெற்றுக் கொள்ளலாம்.
அந்த நான்கு PPV-களில் தடுப்பூசி போட வரும் ஆவணமில்லாத அந்நிய தொழிலாளர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
-----
லங்காவி சுற்றுலா நடவடிக்கைகளுக்காகக் கடந்த வாரம் திறக்கப்பட்டதிலிருந்து, அங்கு உள்ளூர் சுற்றுப் பயணிகளை உட்படுத்திய ஒரு கோவிட் 19 சம்பவம் கூட பதிவாகவில்லை.
இதுவரை அங்கு இரண்டு லட்சம் சுற்றுப் பயணிகள் வருகையளித்துள்ளதாக, லங்காவியின் சுற்றுலா செயற்குழு தலைவர் தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather