Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

அக்டோபர் 1- சுற்றுலாத் தளங்கள் திறக்கப்படலாம்!

Sep 21, 2021


 

அக்டோபர் 1- சுற்றுலாத் தளங்கள் திறக்கப்படலாம்!

பாதுகாப்பான முறையில் சுற்றுலா மேற்கொள்ளும் travel bubble திட்டத்தில் மேலும் சில சுற்றுலா தளங்கள் சேர்க்கப்படவுள்ளன!

Genting மலை, மலாக்கா, தியோமான் தீவு ஆகியவை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி சுற்றுலா நோக்கத்திற்காகத் திறக்கப்படலாம் என, சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் கோடி காட்டியிருக்கின்றார்.

இவ்விவகாரம் நாளை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு, ஒப்புதல் பெறப்படும் என, Datuk Seri Nancy Shukri சொன்னார்.

Travel Bubble திட்டத்தின் கீழ் கடந்த வாரம் லங்காவி சுற்றுப் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டது.

------ 

நாட்டிலுள்ள 80 விழுக்காட்டுப் பெரியவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடிக்கும் இலக்கை மலேசியா அடைந்துவிட்டது!

அவ்வெற்றிக்குப் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் 16 தேதி வாக்கில் மலேசிய மக்களில் 80 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டு முடிப்பர் என இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக, Covidnow தரவு கூறுகின்றது.

----- 

திரங்காணுவில் இன்று தொடங்கி மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.

அக்டோபர் 2ஆம் தேதி வாக்கில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்குத் தடுப்பூசி போட அம்மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.

------ 

இவ்வேளையில், நெகிரி செம்பிலானில் இன்று தொடங்கி 16 முதல் 18 வயதுடைய 15 ஆயிரத்து எண்ணூரு மாணவர்களுக்குக் கட்டங்கட்டமாகத் தடுப்பூசி போடப்படுகின்றது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 44 PPVக்கள் செயல்படுவதாகத் தெரிவித்த மாநில கல்வித் துறை, அவற்றில் பெரும்பாலானவை பள்ளி மண்டபங்கள் என கூறியது.

----- 

மலாக்காவிலுள்ள 100 விழுக்காட்டு மக்களும் கூடிய விரைவில் முழுமையாகத் தடுப்பூசி பெறுவர் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

அவ்விலக்கை அடையும் பட்சத்தில், அக்டோபர் மாத மத்தியில் அம்மாநிலம் தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்குள் நுழையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

----- 

எண்ணெய் நிலையங்கள், உணவகங்கள் மற்றும் மளிகைக்கடைகள் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படலாம்!

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை EMCO அமுலில் உள்ள இடங்களைத் தவிர்த்த, மற்ற எல்லா மாநிலங்களிலும் இத்தளர்வைக் கொண்டு வர, தேசிய மீட்சித் திட்ட SOP-யுடன் தொடர்புடைய 4 அமைச்சர்கள் இடையிலான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

நாளை கோவிட்-19 நிர்வாகப் பணிக்குழுவுடனான சந்திப்பின் போது இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather