← Back to list
விலை மேலும் குறைக்கப்படும்!
Sep 21, 2021
மக்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு Covid-19 சுயப் பரிசோதனைக் கருவியின் விலை மேலும் குறைக்கப்படும்.
ஆயினும் அது அவசர அவசரமாக மேற்கொள்ளப்படாது; படவும் கூடாது.
அரசாங்கம் எடுக்கும் முடிவு, பயனீட்டாளர்களின் நலன் கருதி என்றாலும், வியாபாரிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடாதிருப்பதும் முக்கியம் என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi மக்களவையில் தெரிவித்தார்.
தற்போது ஒரு Covid-19 சுயப் பரிசோதனைக் கருவியின் உச்ச வரம்பு விலை விலை 19 ரிங்கிட் 90 சென்.
மொத்த விற்பனை விலை 16 ரிங்கிட்டாகும்.
சந்தையில் விற்பதற்கு இதுவரை 16 முத்திரையிலான சுயப் பரிசோதனைக் கருவிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Covid-19னுக்கான இலக்கயியல் தடுப்பூசிச் சான்றிதழ்கள் விற்கப்படுவது மீதான தகவல்களைக் கொடுத்து உதவுமாறு PDRM பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேல் நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாக விசாரணை மேற்கொள்ள அவ்விவரங்கள் தேவைப்படுவதாக Bukit Aman தெரிவித்தது.
இதனிடையே இலக்கயியல் தடுப்பூசிச் சான்றிதழ் விற்பனையில் ஈடுபட வேண்டாம் என அது பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியது.
மற்றொரு நிலவரத்தில், தடுப்பூசிச் சான்றிதழ் விற்பனை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள செய்தி குறித்து மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்திற்கு புகாரொன்று கிடைத்துள்ளது.
அது சுகாதார அமைச்சு மற்றும் PDRMமின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
ஒரே முறை செலுத்தப்படும் CanSino வகை தடுப்பூசிக்கும், Booster shot எனும் கூடுதல் தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து போதுமான தரவுகள் கிடைத்த பின்னரே முடிவெடுக்கப்படும்.
சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin அவ்வாறு தெரிவித்திருக்கிறது.
CanSino தடுப்பூசியைப் போட்டு முடித்த 6 மாதத்திற்குப் பிறகு booster shot போடும் சாத்தியம் தொடர்பில் தமதமைச்சுக்கு விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.
ஜொகூர், Kluangங்கில் ஆறாயிரத்து 500க்கும் அதிகமான 16 மற்றும் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் தடுப்பூசி பெறத் தகுதியானவர்களாக இருக்கின்றனர்.
அம்மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களாகப் பயன்படுத்தப் பொருத்தமான ஆறு பள்ளிகளின் பல்நோக்கு மண்டபங்களில் நேற்று முதல் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் கட்டங் கட்டமாகத் தொடங்கியதாக மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
அந்நிய நாட்டு வீட்டுப் பணிப் பெண்களை மீண்டும் வேலைக்கு எடுக்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுமதி வழங்குமாறு மலேசிய வேலை வாய்ப்பு நிறுவனங்கள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
வீட்டில் இருந்து பணி புரிந்து வந்த அதிகமானோர் வேலைக்குத் திரும்பத் தொடங்கியிருக்கும் நிலையில், சிறார்கள், வயதானவர்கள் ஆகியோரைக் கவனித்துக் கொள்ள வீட்டுப் பணிப் பெண்கள் தேவைப்படுவதாக அது சுட்டிக் காட்டியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather