← Back to list
முதலில் 16, 17 வயதினருக்குத் தடுப்பூசி போடவும்!
Sep 20, 2021
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 300ஆகக் குறைந்துள்ளது.
ஆக அதிகமாக சரவாக்கி மூவாயிரம் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிலாங்கூர், சபா, ஜொகூர், பினாங்கு, கிளாந்தான் பேராக் ஆகியவற்றில் ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின.
------
போதுமான தடுப்பூசி கையிருப்பைக் கொண்டுள்ள மாநிலங்கள், தங்களிடமுள்ள 12 முதல் 17 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கலாம்!
கையிருப்பு போதாத மாநிலங்கள், முதலில் 16 மற்றும் 17 வயதுடைய இளையோருக்குத் தடுப்பூசி போடுமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தினார்.
------
12 முதல் 17 வயதுடைய 60 விழுக்காட்டினருக்கு வரும் நவம்பருக்குள் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது போட சுகாதார அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.
வரும் ஜனவரி வாக்கில் 80 விழுக்காட்டு இளையோர் முழுமையாத தடுப்பூசி போட்டு முடிப்பர் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
------
நாட்டிலுள்ள பெரியவர்களில் இதுவரை 78.8 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இதுவரை 4 கோடியே 3 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
-----
ஜொகூரில் தடுப்பூசி போட மறுத்து வந்த ஆசிரியர்களை அம்மாநில பட்டத்து இளவரசர் சந்தித்துப் பேசியுள்ளார்.
அச்சந்திப்பின் பலனாக அவர்களில் 216 ஆசிரியர்கள் தடுப்பூசி போட ஒப்புக் கொண்டுள்ளதாக கல்விக்கான செயற்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
------
மார்ச் 2020 முதல் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை நாட்டில் 411 தற்கொலை முயற்சி சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 221 தற்கொலை முயற்சிகள் பதிவானதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather