← Back to list
நடப்பிலுள்ள மையங்கள் மாணவர்களுக்குத் தடுப்பூசி போட பயன்படுத்தப்படும்!
Sep 20, 2021
Covid-19 தடுப்பூசி போட நடப்பில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட சில தடுப்பூசி மையங்கள் பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப் பயன்படுத்தப்படும்.
சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ள இரு வழிமுறைகளில் அது ஒன்று என அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
12 வயதில் இருந்து 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உபயோகிக்கப்படும் தடுப்பூசி மையங்களின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்றாரவர்.
சரவாக், சபா, லபுவானில் கடந்த 16 ஆம் தேதி வரை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளையோருக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அவர்கள் எவரும் இதுவரை மோசமான பக்க விளைவுகளை எதிர்நோக்கவில்லை.
மற்றொரு நிலவரத்தில், MySejahtera செயலியில் காணப்பட்ட சுமார் 5 லட்சம் இலக்கயியல் தடுப்பூசி சான்றிதழ்கள் பிரச்னைக்கு ஒரு வாரத்தில் தீர்வு ஏற்பட்டுள்ளதாக Khairy கூறினார்.
அப்பிரச்னைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டதோடு தடுப்பூசி பெற்றவர்களின் ஆகக் கடைசி விவரங்களும் சரி செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
தடுப்பூசி முழுமையாகச் செலுத்திக் கொண்டாலும், MySejahteraவில் இன்னும் இலக்கயியல் சான்றிதழ் பெறாதவர்கள், தற்காலிகமாக தடுப்பூசி அட்டையைப் பயன்படுத்தலாம்.
கோவிட்-19 காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தவர்களில் 500க்கும் மேற்பட்டோர் வெளியில் நடமாடியது தெரிய வந்திருக்கிறது.
கடந்த வார நெடுகிலும் பேரங்காடிகள், கடைகள் போன்ற இடங்களுக்குள் அவர்கள் நுழைந்திருப்பது, MySejahtera-வின் Check In பதிவு வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் மாநில சுகாதாரத்துறையும் மாவட்ட சுகாதார அலுவலகமும் மேல் நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடைக்கோ உணவகத்துக்கோ வரும் வாடிக்கையாளர்களின் MySejahthera-வை முதலில் பரிசோதிக்குமாறு உரிமையாளர்களும், உணவக நடத்துநர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Covid-19 தடுப்பூசி தொடர்பிலான பொய்ச் செய்திகள் பரப்படுவது குறைந்துள்ளதாக தொடர்பு, பல்லூடக அமைச்சு தெரிவித்திருக்கிறது.
கடந்தாண்டு மார்ச் மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கியதில் இருந்து கோவிட்-19 சம்பந்தப்பட்ட பொய்ச் செய்திகள் தொடர்பில் 307 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன.
அவற்றில் 163க்கு தீர்வு காணப்பட்ட வேளை, 37 நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அமைச்சு கூறியது.
கினபாலு மலையேறும் நடவடிக்கைகள் உள்ளிட்ட சபாவில் அனைத்து பூங்கா நிர்வாக மையங்களும் அலுவலகங்களும் செப்டம்பர் 16 ஆம் தேதியில் இருந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
எனினும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுகே அனுமதி வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather