← Back to list
சுவாசக் கவசம் கட்டாயமா? சிறந்த முடிவு- சுவாசவியல் நிபுணர்!
Sep 15, 2021
பள்ளிகளில் சுவாசக் கவசத்தைக் கட்டாயமாக்கிய அரசாங்கத்தின் முடிவு மிகவும் வரவேற்கக்கூடியது!
மாணவர்கள் தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளவரளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இப்புதிய விதிமுறை பெரிதும் உதவும் என்கிறார், மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் சுவாசவியல் நிபுணர் Dr விஜயன் முனுசாமி…
"இதனால் பள்ளிகளில் தொற்று பரவலை 60 விழுக்காடு வரை கட்டுப்படுத்த முடியும். சுவாசக் கவசத்தை நீண்ட நேரம் அணிவதால், சுவாசம் சார்ந்த பிரச்னைகள் வரலாமோ என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு வேண்டாம்.
அப்படி ஏதும் இல்லை; இது தவறான கருத்து, சுவாசக் கவசம் அணிவது பிள்ளைகளை எவ்விதத்திலும் பாதிக்காது" என்றார்.
சுவாசக் கவசம் ஒரு பக்கமிருந்தாலும் SOP நடைமுறைகளை மறந்துவிட வேண்டாம் என அவர் நினைவுறுத்தினார்.
வருகின்ற அக்டோபர் மாதம் குறிப்பிட்ட மாநிலங்களில் பள்ளிகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படவிருப்பதால், இனி பள்ளிகளில் சுவாசக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக கல்வி அமைச்சர் முன்னதாக அறிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather