← Back to list
பொழுது போக்குத் தளங்ளை மூட பரிந்துரைக்கப்படலாம்!
Sep 13, 2021
நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
புதிதாக 16 ஆயிரத்து 73 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வழக்கம் போல் சரவாக்கில் மிக அதிகமாக மூவாயிரத்து 522 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அடுத்து ஜொகூரில் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சிலாங்கூர், பினாங்கு, கெடா, பேரா, கிளந்தான், சபா ஆகிய மாநிலங்களில் தலா ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தர செயல்பாட்டு நடைமுறைகள் குறிப்பாக தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் அதிகமாகக் கூடினால், பொது பொழுது போக்குத் தளங்ளை மூட பரிந்துரைக்கப்படலாம்.
காவல் துறை பல பகுதிகளில் முக்கியமாக தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து விட்ட கிள்ளான் பள்ளத்தாக்கில் SOP பின்பற்றலை அணுக்கமாகக் கண்காணித்து வரும் என Bukit Aman, BHச்சிடம் கூறியது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் வார இறுதியில் பொது பொழுது போக்குத் தளங்கள் சிலவற்றில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.
லங்காவி செல்லுவோருக்கு Covid-19 மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்படவில்லை என சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
எனினும் தனிநபர் வாகனங்கள் அத்தீவுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதால், சுற்றுப் பயணிகள் சுற்றுலா முகவர்களின் சேவையைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.
நாட்டில் கொரொனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை சரிவு நிலையைக் காட்டுகிறது.
ஏற்கனவே நிகழ்ந்து ஆனால் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாமல் விடுபட்ட மரணங்களைத் தவிர்த்து நேற்று 99 மரணங்கள் பதிவாகின.
நேற்று மொத்தமாகப் பதிவான மரணங்கள் 292 ஆகும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather