← Back to list
பாதுகாவலரைத் தாக்கிய ஆடவர் மீது கொலை குற்றச்சாட்டு!
Sep 09, 2021
பேராக்கில் பணியிலிருந்த பாதுகாவலரைக் கடுமையாகத் தாக்கிய ஆடவர் மீது Ipoh Majistret நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது!
கடந்தாண்டு டிசம்பரில் அடுக்குமாடி குடியிருப்பொன்றிலுள்ள நீச்சல் குளத்தில் குளிக்க தமக்கும் தமது மகனுக்கும் அனுமதி மறுத்த அந்த பாதுகாவலரை, சம்பந்தப்பட்ட ஆடவர் முரட்டுத் தனமாக அடிக்கும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
அச்சம்பவத்திற்குப் பிறகு எட்டு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த அந்த 64 வயது பாதுகாவலர், கடந்த மாதம் உயிரிழந்தார்.
இதையடுத்து அவ்வாடருக்கு எதிராக சமூக வலைத்தள வாசிகளிடையே கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகர் எனக் கூறப்படும் அவ்வாடவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
-----
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.
70 விழுக்காட்டுப் பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளனர்.
நேற்று மட்டும் மூன்று லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
-----
பஹாங்கில், இம்மாத மத்தியிலிருந்து பள்ளி மாணவர்களுக்குக் கட்டங்கட்டமாகத் தடுப்பூசி போடப்படவுள்ளது.
12லிருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள் முதன்மை படுத்தபடுவர் என மாநில சுகாதாரத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
முடிந்தால், அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பே அவர்களுக்கு இரு தடுப்பூசிகளையும் போட்டு முடிக்க இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
------
சரவாக்கில் ஏறக்குறைய எல்லா கோவிட் 19 தொற்று சம்பவங்களும், அறிகுறிகள் இல்லாத அல்லது மிதமான அறிகுறிகளைக் கொண்டிருப்பதால், அம்மாநிலம் Endemic கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது.
அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்பூசி நடவடிக்கைகள் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திருப்பதோடு, தொற்றுக்கான மோசமான விளைவுகளையும் குறைத்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
------
சிலாங்கூர், கிள்ளானில் கையுறை தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணை நடைபெற்று வருகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather