← Back to list
நடப்பிலுள்ள தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்!
Aug 26, 2021
Covid-19னுக்கான மூன்றாவது தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலிக்கும் முன் முதலில் நாடு முழுவதும் நடப்பில் உள்ள தடுப்பூசி போடும் பணிகள் மேம்படுத்தப்பட்டு விரைவுபடுத்தப்பட வேண்டும்.
சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr. Noor Hisham Abdullah அவ்வாறு வலியுறுத்தியிருக்கிறார்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு Booster Dose எனும் கூடுதல் தடுப்பூசி செலுத்துவது உருமாறிய delta வகைக் கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்க உதவாது என அவர் சுட்டிக் காட்டினார்.
இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால்தான் delta கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்றாரவர்.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசிய தினம் வாக்கில் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு முழுமையாக Covid-19 தடுப்பூசி போட்டு முடித்து விட முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை கொண்டிருக்கிறது.
அக்கிருமித் தொற்றுப் பரவலையும் கொரோனா நோயாளிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதை சுகாதார அமைச்சு சுட்டிக் காட்டியது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதுவரை 41.6 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
பெர்லிசில் தடுப்பூசி போட மறுத்து வரும் 26 ஆசிரியர்களிடம் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு பேசப்பட்டு வருகிறது.
பள்ளிகள் மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்ய ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருவதாக அம்மாநில கல்விப் பிரிவு ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.
தங்களுக்கு நாட்பட்ட நோய்கள் இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட 26 ஆசிரியர்கள் தடுப்பூசியை மறுத்து வருகின்றனர்.
சிலாங்கூரில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து 11 தடுப்பூசி மையங்கள் நேரடியாக walk in முறையில் செல்லும் மலேசியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தும் முயற்சியாக அம்மையங்கள் செயல்படுவதாக மாநில அரசு தெரிவித்தது.
மலேசியர்கள் அல்லாதவர்கள், MySejahtera மூலம் பதிவு செய்து தேதி கொடுக்கப்பட்டதும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் செல்ல வேண்டும் என அது கூறியது.
ஜொகூரில் தேசிய மீட்சித் திட்டத்தின் தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறுவோருக்கு உடனடியாக பத்தாயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதற்காக சுமார் 200 அமலாக்கப் பணியாளர்கள் சாதாரண மக்களாக மாறுவேடமிட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பதாக மாநில அரசு தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather