← Back to list
Datuk Seri Ismail Sabri Yaakob புதிய பிரதமர்!
Aug 20, 2021
நாட்டின் ஒன்பதாவது பிரதமர் யார் என்பதற்கு விடை கிடைத்துள்ளது.
UMNO உதவித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான Datuk Seri Ismail Sabri Yaakob புதிய பிரதமராக நியமிக்கப்படுவதாக மாமன்னர் அறிவித்திருக்கின்றார்.
220 நாடாளுமன்ற உறுப்பினர்களில், ஆட்சி அமைக்க 111 இடங்கள் தேவை என்ற நிலையில், Ismail Sabri-க்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.
அதன் வழி புதிய அரசாங்கத்தை அமைக்க Datuk Seri Ismail Sabri பெரும்பான்மையைப் பெற்றிருப்பதாக பேரரசர் அறிக்கை வழி தெரிவித்தார்.
Datuk Sri Ismail Sabri நாளை பிற்பகல் மணி 2.30க்கு Istana Negaraவில் பிரதமராக பதவியேற்றுக் கொள்வார்.
புதிய அரசாங்கம் Covid-19னுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டும் என மாமன்னர் கேட்டுக் கொண்டார்.
Ismail Sabri பிரதமராகவிருப்பதை அடுத்து, 3 ஆண்டுகள் இடைவெளி அதாவது 14-வது பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்த பிறகு, முதன் முறையாக தேசிய முன்னணியின் கைக்கு அப்பதவி மீண்டும் போயிருக்கின்றது.
நாட்டில் மிக உயரிய தினசரி எண்ணிக்கையாக புதிதாக 23 ஆயிரத்து 564 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆறாயிரத்து 974 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
சபாவிலும் சரவாக்கிலும் தலா ஈராயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகின.
KL, ஜொகூர், கெடா, பினாங்கு, கிளந்தான், பேரா ஆகியவற்றில் தலா ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து முதல் கட்ட விநியோகமாக 2 லட்சம் CanSino தடுப்பூசிகள் மலேசியா வந்தடைந்துள்ளன.
ஒரு தடுப்பூசி மட்டுமே தேவைப்படும் CanSino தடுப்பூசிகள் நாடு முழுவதும் உட்புறப் பகுதிகளுக்கு அனுப்பப்படும்.
மலேசியா மொத்தமாக 35 லட்சம் CanSino தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்துள்ளதாகவும் அவை கட்டங் கட்டமாகப் பெறப்படும் எனவும் சுகாதாரத் தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் முழுமையாக இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர்.
பெரியவர்களில் 50 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 2 கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமான முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்தில் உள்ள மாநிலங்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதியளிக்கப்பட்டிருப்பதை மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
அதே சமயம் தங்களது உறுப்பினர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்த வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என PRESMA கேட்டுக் கொண்டது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather