← Back to list
Aug 19, 2021
கெடா, பினாங்கு, பேராக் ஆகிய மாநிலங்களில் நாளை வரை கடும் மழை பெய்யும் என்றும், அதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
இதையடுத்து அச்சூழலை எதிர்கொள்ள தாங்கள் தயாராகவே இருப்பதாக பினாங்கு மாநில துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் கூட சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த இதுவரை மோசமான பாதிப்பு ஏதுமில்லை என்றும், நிலைமை கட்டுப்பாட்டில் தான் இருப்பதாகவும் பேராசிரியர் Dr P. Ramasamy சொன்னார்.
"இது வழக்கமான ஒன்று தான், ஒவ்வோர் ஆண்டும் வெள்ளம் ஏற்படுகின்றது, அதற்கான ஆயத்த வேலைகளையும் நாங்கள் முன்கூட்டியே செய்து விட்டோம். எனவே, நிலைமை கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. இப்போதைக்கு எந்த பிரச்னையும் இல்லை", என்றாரவர்.
மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் Ramasamy சொன்னார்.
இதனிடையே, தமக்குத் தெரிந்த வரை இந்த வெள்ள நிலவரம் மாநிலத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
பினாங்கில் இதுவரை 40 விழுக்காட்டுப் பெரியவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது போட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், மத்திய அரசு தங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather