Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

11 துறைகள் செயல்பட அனுமதி

Aug 15, 2021


11 துறைகள் செயல்பட அனுமதி

தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்டத்தில் உள்ள மாநிலங்களிலும் கூட்டரசு பிரதேசங்களிலும் 11 பொருளாதாரத் துறைகள் மீண்டும் செயல்பட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

முடி திருத்தும் கடைகள், வாகனம் கழுவும் கடைகள், மின்னியல் மற்றும் மின்சார சாதன விற்பனைக் கடைகள், வீட்டுப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் விற்பனைக் கடைகள், விளையாட்டு உபகரண விற்பனைக் கடைகள், துணிக் கடைகள், காலை மற்றும் விவசாயச் சந்தைகள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

முதல் கட்டங்களில் உள்ள மாநிலங்களிலும் கூட்டரசு பிரதேசங்களிலும் அவை நாளை தொடங்கி இயங்கலாம் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கூறினார்.

அதே சமயம் இரண்டாம் கட்டங்களில் உள்ள மாநிலங்களில் அப்பதினொரு துறைகளைத் தவிர்த்து மேலும் 11 துறைகள் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. 

பூக்கள் மற்றும் பூச்செடிகள் விற்பனைக் கடைகளும் புகைப்படங்கள் எடுக்கும் மற்றும் அது சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகளும் அவற்றில் அடங்கும் என பிரதமர் சொன்னார்.

ஆயினும் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் உள்ள மாநிலங்களிலும் கூட்டரசு பிரதேசங்களிலும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பெரியவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டை அடைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அத்துறைகள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

அதோடு சம்பந்தப்பட்ட துறைகள் தங்களது சேவையைப் பெற வருவோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.     

11 துறைகள் செயல்பட அனுமதி

நாடு முழுவதும் இதுவரை 2 கோடியே 72 லட்சத்துக்கும் அதிகமான Covid-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதனிடையே நேற்று ஒருநாளில் 4 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டன.

11 துறைகள் செயல்பட அனுமதி

செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளிகளைக் கட்டங் கட்டமாக நேரடி வகுப்புகளுக்குத் திறப்பது குறித்து கல்வியமைச்சு கருத்துகளைப் பெற்று வருகிறது. 

அதன் தொடர்பில் மாநில கல்வித்துறை இயக்குனர்கள், பள்ளி முதல்வர்கள், தலைமையாசியர்கள் ஆகியோர் பெற்றோர்களிடம் இருந்து கருத்துகளைத் திரட்டி வருவதாக Malay Mail தகவல் வெளியிட்டுள்ளது. 

நாட்டில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகப் பதிவாகி வரும் நிலையில், பள்ளிகளைத் தற்போது திறப்பது சரியாக இருக்காது என பல தரப்பினரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.   

11 துறைகள் செயல்பட அனுமதிகிள்ளான் பள்ளத்தாக்கில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை இம்மாத இறுதியில் இருந்து குறையத் தொடங்கலாம். 

அச்சமயத்தில் நாட்டில் 50 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும் என்பதைச் சுட்டிக் காட்டி சுகாதாரத் தலைமை இயக்குனர் அவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார். 

11 துறைகள் செயல்பட அனுமதி

தங்களது தொழிலாளர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுப்பாத முதலாளிகளுக்கு எதிராக சிலாங்கூர் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. 

அதன் தொடர்பில் மாநில Menteri besar கூடிய விரைவில் அறிவிப்பு வெளியிடவிருக்கிறார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather