Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Booster shot-டுக்கு அவசரம் காட்ட வேண்டாம்-MMA!

Aug 09, 2021


booster shot-டுக்கு அவசரம் காட்ட வேண்டாம்-mma!

Booster shot எனப்படும் மூன்றாவது தடுப்பூசி போடுவதை அமுலுக்கு கொண்டு வருவதற்கு முன்பு, அதற்கான அவசியம் குறித்து அரசாங்கம் தீர ஆராய வேண்டும்!

ஆதாரப்பூர்வமான காரணம் இல்லாமல் மூன்றாவது தடுப்பூசி போடுவது என்பது, வீன் செலவையும் நேரச் செலவையும் தான் கொடுக்கும் என, மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் Dato Dr சுப்பிரமணியம் முனியாண்டு கூறுகிறார்.

இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு வழி விடும் வகையில், Booster தடுப்பூசி போடுவதில் அவசரம் காட்ட வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருப்பதையும் Dr சுப்பிரமணியம் சுட்டிக் காட்டினார். 

நாட்டில் உருமாரிய Delta வகை கிருமி தொற்று சீற்றம் காட்டி வருவதால், மூன்றாவது தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் அதன் தொடர்பான அறிவிப்பு வரும் என்றும் அமைச்சர் Datuk Seri Dr Adham Baba முன்னதாக தெரிவித்தார்.

----- 

இதனிடையே இம்மாத இறுதிக்குள் 80 விழுக்காடு கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அடையும் இலக்கை நோக்கி மலேசியா சரியாக சென்று கொண்டிருக்கின்றது!

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதுவரை 37.5 விழுக்காட்டினர் கோவிட் 19-னுக்கான இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளனர்.

அதே வேளை 67.4 விழுக்காடினர் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது போட்டுக் கொண்டிருப்பதாக, தடுப்பூசி போடுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் மூன்று லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

----- 

இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்தவர்கள் நாளை தொடங்கி தொலைவில் வசிக்கும் கணவன் மனைவியைச் சந்திக்கும் நோக்கத்திற்காக மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்கலாம்.

தடுப்பூசி போட்டு முடித்த பெற்றோர்கள் தூரத்தில் இருக்கும் 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட தங்களின் பிள்ளைகளைச் சந்திக்க அனுமதி அளிக்கப்படுவதாக பிரதமர் நேற்று அறிவித்தார்.

உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணவும், ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளவும், சமூக இடைவெளியோடு வெளிப்புற உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

----- 

மற்றொரு நிலவரத்தில், இரு தடுப்பூசிகளையும் போட்டு முடித்தவர்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணலாம் என்ற தளர்வை அரசாங்கம் கொண்டு வந்தாலும், பொது மக்களிடையே அதற்குப் பெரிய ஆதரவு ஏதும் கிடைக்காது என்றே தாங்கள் நம்புவதாக மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இந்த பெருந்தொற்று காலத்தில் பலர் உணவகங்கள் அமர்ந்து நேரத்தைக் கழிக்க விரும்பமாட்டார்கள்;

தவிர மக்கள் தற்போது take away முறை, அதாவது உணவை வாங்கிக் கொண்டு செல்லும் நடைமுறைக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என, அச்சங்கம் The Starரிடம் தெரிவித்துள்ளது.

----- 

பிரதமரின் பெரும்பான்மை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை, தாம் தொடர்ந்து Perikatan Nasional அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கப் போவதாக அறிவியல் தொழில்நுடப் புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin அறிவித்துள்ளார்.

இப்போதைக்கு கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அடையும் இலக்கை நோக்கிய தனது போராட்டம் ஓயாது, என கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளருமான அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

--- 

வாகனமோட்டும் உரிமத்தைப் புதுப்பிக்காத வாகனமோட்டிகளுக்கு அக்டோபர் முதல் தேதியிலிருந்து அபராதம் விதிக்கப்படும்!

வாகனமோட்டும் உரிமத்தைப் புதுப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் அடுத்த மாதம் 30ஆம் தேதியோடு முடிவடையவிருப்பதை சாலை போக்குவரத்து துறை நினைவுபடுத்தியது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather