← Back to list
மேலும் அதிகமானோர் பதிய வேண்டும்!
Jul 28, 2021
புதிதாகப் பதிவாகியுள்ள Covdi-19 சம்பவங்களின் எண்ணிக்கை மிக உயரிய தினசரி எண்ணிக்கையாக உள்ளது.
புதிதாக 17 ஆயிரத்து 405 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஏழாயிரத்து 171 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்து கெடாவில் மிக அதிகமாக ஆயிரத்து 112 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பெர்லிசில் ஓரிக்கத்திலேயே சம்பவம் பதிவாகியுள்ளது.

Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்ள நாடு முழுவதும் 2 கோடியே 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
எனினும் அவ்வெண்ணிக்கை இலக்கு வைக்கப்பட்ட 80 விழுக்காட்டை எட்ட மேலும் அதிகமானோர் பதிய வேண்டும் என தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
“Berdasarakan statistik yang saya sebutkan jelas sekali, jumlah pendafataran pada Ketika ini adalah masih rendah berbanding sasaran PICK iaitu sebanyak 80 peratus daripada kesuluruhan populasi yang perlu divaksin”
இதனிடையே நாடு முழுவதும் ஈராயிரத்து 300க்கும் அதிகமான தடுப்பூசி மையங்கள் இயங்குவதாக அவர் சொன்னார்.
மற்றொரு நிலவரத்தில் இம்மாதம் வரை கிட்டதட்ட 25 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாகக் கிடைத்துள்ளதாக Khairy சொன்னார்.
அமெரிக்காவிடம் இருந்து மிக அதிகமாக பத்து லட்சத்துக்கும் அதிகமான Pfizer தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.
ஜப்பான் AstraZenecaவையும் சீனா Sinovacக்கையும் வழங்கியுள்ளன.
தடுப்பூசியை நன்கொடையாக வழங்க முன் வருவோர் வரவேற்கப்படுவதாகவும் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமான அவர் கூறினார்.

Serdangங்கில் Covid-19னுக்கு சிகிச்சையளிக்கும் MAEPS மையத்தினுள் சில ஊடகவியலாளர்கள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுவது குறித்து சிலாங்கூர் காவல் துறை விசாரித்து வருகிறது.
அனுமதியில்லாமல் வெளி ஆட்கள் யாரும் அங்கு நுழைய முடியாது என அது கூறியது.
அச்சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க இதுவரை 17 சுகாதாரப் பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு RON97 பெட்ரோல் விலை ஒரு சென் அதிகரித்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 74 சென்னுக்கு விற்கப்படும்.
RON95 மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather