Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஏழு மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது!

Jul 26, 2021


ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது!

ஏழு மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது!

எனினும், காலை 10 மணிக்கு தொடங்கிய சிறப்பு அமர்வு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூச்சல் குழப்பதால் தடைப்பட்டது.

சிறப்பு அமர்வு சட்டப்பூர்வமானதா என எதிர்கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

இவ்வேளையில், இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு COVID-19 பீடித்திருப்பது உறுதிப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்பில் இருந்த சில MPகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

வாதங்களும், வாக்கெடுப்புகளும் நடத்த ஏன் அனுமதியில்லை என எதிர்கட்சி MPகள் முன் வைத்த கேள்விக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான சட்ட அமைச்சர் Datuk Seri Takiyuddin Hassan விளக்கமளித்தார்.

இன்று பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, தேசிய மீட்சித் திட்டம் குறித்து விளக்கமளிக்கிறார்.

கடந்த ஜனவரி 12ஆம் தேதி அவசர நிலை அறிவிக்கப்பட்ட பிறகு, MPகள் நாடாளுமன்றத்தில் கூடுவது இது முதல் முறையாகும்.

 

காலியான தடுப்பூசிகளுக்கும், விற்பனை கும்பல்களுக்கும் தொடர்பில்லை!

COVID-19 தடுப்பூசி மையங்களில், மருந்தில்லா காலியான தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவங்களுக்கும், தடுப்பூசிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பல்களுக்கும் தொடர்பில்லை!

அச்சம்பவங்களுக்கு மனிதக் கவனக் குறைவே காரணம் என தெரிய வந்துள்ளது.

அதில் மோசடிகள் நிகழ்ந்திருப்பதாக  இதுவரை எந்த ஆதாரமும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என காவல் துறை கூறியிருப்பதை, COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், தடுப்பூசி போடுவதில் ஏற்படும் மனிதக் கோளாறுகள் மற்றும் கவனக் குறைவு, மலேசியாவில் மட்டும் நிகழவில்லை.

இதர வெளிநாடுகளிலும் இதுப் போன்ற கவனக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன; சிங்கப்பூரில் ஒரே நபருக்கு தவறுதலாக 5 முறை தடுப்பூசிப் போடப்பட்ட சம்பவத்தை Khairy மேற்கோள் காட்டினார்.

இந்நிலையில், இது போன்ற கவனக் குறைவாக நிகழும் சம்பவங்களை வேண்டுமென்றே பூதாகரமாக்கி, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஒரு சில தரப்பினரின் செயலையும் Khairy சாடினார்.

ஏழு மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது!

இவ்வேளையில், சில குறிப்பிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டே, ஒருவருக்கு, MySejahtera செயலியில், தடுப்பூசிக்கான தேதி வழங்கப்படுகின்றது.

சம்பந்தப்பட்டவர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்துக் கொண்ட தேதி, அவரது இடத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசிப் பணிகளின் அண்மைய நிலவரம் மற்றும் மருத்துவமனை அல்லது கிளினிக்குகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள காத்திருப்பவர்களின் பட்டியல் ஆகியவற்றை பொறுத்து தான், தடுப்பூசிக்கான தேதி நிர்ணயிக்கப்படுகின்றது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது!

COVID-19 தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin இதனை தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.

தடுப்பூசி பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படுவதால், ஒரு கட்டப் பணிகள் முடிந்த பிறகே மற்றொரு கட்டத்திற்கு நகர முடியும்; அதனால் தான், சிலர் சீக்கிரமே தடுப்பூசிக்கு பதிந்திருந்தும், அவர்களுக்கு தேதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக Khairy சொன்னார்.

கடந்த பிப்ரவரி மாதமே தடுப்பூசிக்கு பதிந்து விட்ட போதிலும் தங்களுக்கு இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான தேதி கிடைக்கவில்லை; 

ஆனால், சிலருக்கோ உடனே பதிந்து, உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள தேதி கிடைத்திருப்பது மட்டும் எப்படி என சிலர் கேள்விக் கேட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது தொடர்பில் Khairy பதிலளித்துள்ளார்.

ஏழு மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது!

மற்றொரு நிலவரத்தில், COVID-19 தொற்றுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அடுத்த மாதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்காலக்கட்டத்திற்குள், நாட்டிலுள்ள பெரியவர்களில் 40 விழுக்காட்டினர் முழுமையாக இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு முடித்திருப்பார்கள் என்பதே அதற்கு காரணம் என, அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்துள்ளார்.

COVID-19 தொற்றால் ஏற்படும் மோசமான விளைவுகளையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சாத்தியத்தையும் குறைக்க தடுப்பூசி உதவுவதாக கூறிய Khairy, அதற்கான ஆதாரத்தையும் குறிப்பிட்டார்.

2ஆம் கட்ட தடுப்பூசி திட்டம் தொடங்கியப் பிறகு, Sungai Buloh மருத்துவமனையில், வயதானவர்களை உட்படுத்தி, 4ஆம், 5ஆம் கட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் சம்பவங்கள் குறைந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

 

தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை!

நாட்டில் 55 லட்சத்திற்கும் அதிகமானோர் அதாவது மொத்த மக்கள் தொகையில் 16 புள்ளி 9 விழுக்காட்டினர் இரு டோஸ் தடுப்பூசிகளை போட்டு முடித்துள்ளனர்.

ஏழு மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது!

நேற்று ஒரு நாளில், ஏறக்குறைய 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

 

பேரங்காடி நடத்துநர்களின் எதிர்பார்ப்பு!

பேரங்காடிகளில் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பில் ஈடுபடும் பணியாளர்களில் 70 விழுக்காட்டினர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு முடித்த பிறகு, பேரங்காடிகளை மீண்டும் திறக்கலாம் என, அதன் சங்கம் கூறியிருக்கின்றது.

பேரங்காடிகள் மீண்டும் வழக்கம் போல் திறக்கப்பட்டதும், இரு டோஸ் தடுப்பூசி போட்டு முடித்தவர்கள் மட்டுமே பேராங்காடிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அதன் நடத்துநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதன் வழி, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இரு டோஸ் தடுப்பூசிகளை போட்டு முடித்தவர்களுக்கான SOP தளர்வுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் முன்னதாக கூறியிருந்தார்.

 

-Sauriyammal Rayappan (Astro Radio News)-


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather