← Back to list
எண்ணாயிரத்துக்குக் குறைந்துள்ளது!
Jul 12, 2021
அரச மலேசிய காவல் துறை PDRM நாடு முழுவதும் இரண்டாம் கட்ட Op Bantu மூலம் சுமார் 12 ஆயிரம் உணவுக் கூடைகளை விநியோகித்துள்ளது.
இரண்டாம் கட்ட Op Bantu இன்று தொடங்கியது.
அந்த உணவுக் கூடைகள் நாடு முழுவதும் உள்ள 156 காவல் துறை தலைமையகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொரு காவல் துறை தலைமையகமும் Covid-19 பரவலால் மிகவும் பாதிக்கப்பட்ட 300 பேரைத் தேர்வு செய்து அந்த உணவுக் கூடைகளை வழங்கும்.
தொழிற்சாலை மற்றும் தயாரிப்புத் துறையைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் வாரம் இரு முறை RTK swab சோதனை செய்து கொள்வது கடந்த ஏழாம் தேதியில் இருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்குவதற்கான விதிமுறையை மேலும் கடுமையாக்கும் நோக்கில் அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சு தெரிவித்தது.
கட்டாயமாக்கப்பட்டுள்ள அச்சோதனையின் மூலம் Covid-19 சம்பவங்களை முன் கூட்டியே அடையாளம் கண்டு அக்கிருமித் தொற்று இல்லாதவர்கள் மட்டுமே வேலையிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதை உறுதிச் செய்ய முடியும் என அது கூறியது.
நாடு முழுவதும் இதுவரை 35 லட்சத்துக்கும் அதிகமானோர் Covid-19 தடுப்பூசியின் முழுமையாக இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
அவ்வெண்ணிக்கை 10.8 விழுக்காடாகும்.
78 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலாவது டோசைப் பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக ஒன்பதாயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகி வந்த Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்துக்குக் குறைந்துள்ளது.
புதிதாக எண்ணாயிரத்து 574 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக நாலாயிரத்து 308 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Covid-19னுக்கான தர செயல்பாட்டு நடைமுறை SOPக்களை மீறியதற்காக கூட்டரசு பிரதேச அமைச்சர் Tan Sri Annuar Musaவுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் Tun Abdullah Ahmad Badawiயைத் தமது மனைவியுடன் நேரில் சென்று கண்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்த நிலையில், அவருக்கு ஈராயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக Berita Harian தகவல் கூறுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather