Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மாநிலம் கடந்து பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கு தண்டம்!

Jul 12, 2021


நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீற வேண்டாம் என, பொது மக்கள் மீண்டும் மீண்டும் நினைவுறுத்தப்படுகின்றனர்!

SOPகளை மீறி, ஒன்றுக்கூடுதல்களை நடத்தும் வீட்டுச் சொந்தக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என மலாக்கா காவல் துறை எச்சரித்துள்ளது.

மாநிலம் கடந்து பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கு தண்டம்!

14 முதல் 18 வயது வரையிலான பதின்ம வயதினர், நெகிரி செம்பிலானில் இருந்து மலாக்காவுக்கு, அனுமதியின்றி மாநிலம் கடந்துச் சென்ற சம்பவத்தை அத்துறை மேற்கோள் காட்டியது.

பிறந்தநாள் கொண்டாடுவதற்காக ஒரு வீட்டின் முன்புறம் கூடிய அவர்களுக்கு மொத்தமாக 30 ஆயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டதாக அத்துறை தெரிவித்தது.

அப்பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த 17 வயது பெண்ணுக்கு 4 ஆயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டது.

 

சம்பவங்கள் அதிகரிக்க பரிசோதனைகள் காரணம்!

நாட்டில் COVID-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டும் வரும் பேரளவிலான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளே காரணம்.

மாநிலம் கடந்து பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கு தண்டம்!

துணைப் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob அதனை தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மற்றும் KLலில் உள்ள சில பகுதிகளில் EMCO-வை அறிவிக்கும் போதே, அங்கு கொரோனா சம்பவங்கள் அதிகரிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என அவர் கூறினார்.

நேற்று மட்டும் 9 ஆயிரத்து 105 கொரோனா சம்பவங்கள் பதிவாகின; 91 பேர் அத்தொற்றினால் உயிரிழந்தனர்.

மாநிலம் கடந்து பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கு தண்டம்!

இதனிடையே, COVID-19 பெருந்தொற்றுக்கு எதிரான SOPகளை மீறும் தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரத் தளங்கள் மீது கரிசனம் காட்டப்படாது  என்றும் Datuk Seri Ismail Sabri கூறியுள்ளார்.

அவ்வாறு SOPகளை மீறிய குற்றத்திற்காக தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரத் தளங்கள் என சுமார் 108 பகுதிகள் உடனடியாக மூடப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

 

11  மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள்!

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

 மாநிலம் கடந்து பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கு தண்டம்!

நேற்று முன் தினம் மட்டும் 3 லட்சத்து 25 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.

இவ்வேளையில், நாட்டில் இன்னும் தீவிரமாக இருக்கும் COVID-19 clusterகள் எண்ணிக்கை 865ஆக அதிகரித்துள்ளது.

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 19 cluster அதிலடங்கும் என சுகாதார அமைச்சு கூறியது.

அதில், 13 clusterகள் வேலையிடம் தொடர்பானவை.

சபாவில், 4 வயது சிறுமி வாயிலாக புதிய cluster உருவாகியிருக்கின்றது.

Kenigau மாவட்டத்தில் உள்ள மரப்பலகை ஆலையை அந்த cluster உட்படுத்தியிருக்கின்றது.

அந்த clusterரின் கீழ் இதுவரை, 88 பேர் பரிசோதிக்கப்பட்டு, அவர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

i-Citra விண்ணப்பம் இன்று தொடங்கியது!

55 வயதுக்கு கீழ்ப்பட்ட EPF சந்தாதாரர்கள் i-Citra திட்டத்தின் கீழ் பணத்தை மீட்க, Icitra.kwsp.gov.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாக இன்று முதல்  விண்ணப்பிக்கலாம். 

மாநிலம் கடந்து பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கு தண்டம்!

 அத்திட்டன் கீழ், முதல் மற்றும் 2ஆம் கணக்கில் உள்ள மிச்சத் தொகையின் அடிப்படையில், ஒருவர் மாதா மாதம் அதிகபட்சம் ஆயிரம் ரிங்கிட் என ஐயாயிரம் ரிங்கிட் வரை மீட்கலாம்.

 


 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather