← Back to list
EMCO பகுதிகளில் கொரோனா சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு!
Jul 09, 2021
வரக்கூடிய நாட்களில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு.

அப்பகுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்றுப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதே அதற்கு காரணம் என, சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்துள்ளார்.
பரிசோதனைகள் அதிகரிக்கப்படுவதால், தினசரிப் பதிவாகும் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகமாக பதிவாகி வருவதாக அவர் சொன்னார்.
இதுவரைக்குமான நிலவரப்படி, EMCO அமுலில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 10 விழுக்காட்டு மக்கள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆகக் கடைசியாக நாட்டில், எட்டாயிரத்து 868 கொரோனா சம்பவங்கள் பதிவாகின.
மே 29 ஆம் தேதி பதிவான ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான சம்பவங்களுக்குப் பிறகு பதிவாகியுள்ள 2ஆவது மிக உயரிய எண்ணிக்கை அதுவாகும்.
நேற்று மேலும் 135 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகினர்.

இதனிடையே, சிலாங்கூரில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான COVID-19 சம்பவங்கள் பதிவாகின.
அதற்கு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரளவிலான கொரோனா தொற்றுப் பரிசோதனைகள் தான் காரணம் என மாநில Menteri Besar கூறியுள்ளார்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த , தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் அவர் சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
அதாவது, EMCO முடியும் வரை அத்தியாவசிய தேவை அல்லாத பொருளாதார தொழில்துறைகளை தொடர்ந்து மூடுவது, தொழில்துறைகள் மீண்டும் வழக்கம் போல் செயல்படுவதற்குள், தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்துவது ஆகியவை அதிலடங்கும்.
பொதுத் தேர்தலை நடத்த இது சரியான நேரம் அல்ல!
நடப்பு அரசியல் நிலவரம் எதில் போய் முடிந்தாலும், நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த இது சரியான நேரம் அல்ல என Pakatan Harapan கருதுகின்றது.
இப்போதைக்கு COVID-19 பெருந்தொற்றில் இருந்து நாட்டை மீட்பதிலும், தேசிய தடுப்பூசி திட்டத்தை வெற்றியடையச் செய்வதிலும் தான் கவனம் செலுத்தப்பட வேண்டும் என Pakatan தலைவர்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Perikatan Nasional அரசாங்கத்திற்கான அம்னோவின் ஆதரவு குறித்து முரண்பாடான அறிக்கைகள் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில், PH அவ்வாறு கூறியிருக்கிறது.
பிரதமருக்கான ஆதரவை அம்னோ உடனடியாக மீட்டுக் கொள்வதாக, அதன் தலைவர் நேற்று அதிகாலை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து அமைச்சரவையில் உள்ள UMNO தலைவர்கள் பதவி விலகலாம் என பரவலாகக் கூறப்பட்டது; ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில் தான், நேற்று மாலை தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பிரதமரை தாங்கள் தொடர்ந்து ஆதரித்து வரப் போவதாக குறிப்பிட்டிருந்தனர்.
COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் மக்கள் நலன் காக்க அம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

ஆனால் நேற்று இரவோ, BN MP-களின் அறிக்கைக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.
முகிதினுக்கான ஆதரவை மீட்டுக் கொள்ள UMNO எடுத்த முடிவில் தாம் இருப்பதாக நஜீப் சொன்னார்.
இவ்வேளையில், PAS கட்சி, சரவாக் கட்சிகளின் கூட்டமைப்பு GPS ஆகியவையும் Tan Sri Muhyiddin-னுக்கான ஆதரவை மறு உறுதிபடுத்தி உள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather