← Back to list
Covid-19: ஏழாயிரம் சம்பவங்கள் பதிவாகியுள்ளன!
Jul 06, 2021

நாட்டில் இன்று பதிவாகிய புதிய கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
புதிதாக ஏழாயிரத்து 654 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் ஆக அதிகமாக மூவாயிரத்து 620 சம்பவங்களும், KL லில் ஆயிரத்து 550 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
-----
இவ்வாண்டு இறுதிக்குள் 80 விழுக்காட்டு மலேசியர்களுக்குத் தடுப்பூசி போட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
வரும் அக்டோபர் இறுதிக்குள் 80 விழுக்காட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairry Jamaluddin தெரிவித்தார்.
இதனிடையே நாட்டில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் மூன்று லட்சத்துக்கும் கூடுதல் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
நேற்று மூன்று லட்சத்து 13 ஆயிரம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 96 ஆயிரத்துக்கும் அதிகமான முதல் டோசும், ஒரு லட்சத்து 17 ஆயிரம் இரண்டாம் டோசும் அதிலடங்கும்.
------
தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் இடங்களில் அத்யாவசிய துறைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட துறைகள் தங்களிடம் புதிய அனுமதி கடித்தத்தைப் பெற்றிருக்க வேண்டும் என அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சு தெரிவித்தது.
தமதமைச்சின் புதிய அனுமதி கடிதத்தில் PPN என்ற எழுத்து QR குறியீட்டின் கீழ் இடம்பெற்றிருக்கும் என MITI சொன்னது.
-----
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டிலுள்ள சுமார் 63 விழுக்காட்டு தங்கும் விடுதி ஊழியர்கள் சம்பளமில்லா விடுமுறையில் சென்றுள்ளனர்.
சுமார் 120 தங்கும் விடுதிகள் நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ மூடப்பட்டுள்ளதாக தங்கும் விடுதிகள் சங்கம் Utusan Malaysia-விடம் தெரிவித்துள்ளது.
-----
ஜூன் முதலாம் தேதி தொடங்கி நேற்று வரை நாடு முழுவதும் தர செயல்பாட்டு நடைமுறைகளை மீறிய 188 கட்டுமானத் தளங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather