← Back to list
புதிதாக 21 தடுப்பூசி மையங்கள்!
Jul 06, 2021

நாட்டில் புதிதாக 21 தடுப்பூசி மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
சிலாங்கூர், பினாங்கு, பஹாங், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் நேற்று அவை திறக்கப்பட்டன.
சிலாங்கூரில் புதிதாக ஏழு தடுப்பூசி மையங்கள் இயங்குவதாக Covid-19 தேசிய தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin தெரிவித்தார்.
"Kita buka tujuh pusat pemberian vaksin (PPV) yang akan mula beroperasi hari ini selain meningkatkan kapasiti PPV mega kepada hampir dua kali ganda,"
சிலாங்கூர் மாநிலம் இம்மாதம் நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசி டோஸ்களைச் செலுத்த இலக்கு வைத்துள்ளது.
மற்றொரு நிலவரத்தில், அடுத்தக் கட்டமாக சுகாதாரப் பிரச்னை இல்லாத இளையோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அவர் சொன்னார்.
இளையோர் மத்தியில் காணப்படும் குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்னைகளின் மருத்துவத் தரவுகளை அடிக்கடி ஆய்வு செய்ய தடுப்பூசி பெறுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
அவர்களுக்கு Sinovac தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.
சீனாவில் இருந்து 5 லட்சம் Sinovac தடுப்பூசி டோஸ்கள் இம்மாத மத்தியில் நாடு வந்து சேரும்.
அதே சமயம் ஜப்பானும் AstraZeneca தடுப்பூசி டோஸ்களை வழங்குகிறது.
இதற்கு முன் அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய 10 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன.

Covid-19 கிருமித் தொற்றில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான கால இடைவெளி குறித்து கூடிய விரைவில் முடிவு செய்யப்படும்.
சில தடுப்பூசி போடும் மையங்கள் அக்கால இடைவெளியை வெவ்வேறாக நிர்ணயித்திருப்பதே அதற்குக் காரணம்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் காவல் துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவிருக்கிறது.
KLலில் அண்மையில் முள்வேலி போடப்பட்டிருந்த PPR குடியிருப்புப் பகுதியில் இருந்து மூன்று ஆடவர்கள் தப்பியோடியதை அடுத்து அவ்வாறு செய்யப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather