Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

நாடாளுமன்றம் ஆகஸ்ட் முதல் தேதிக்குள் கூடும்!

Jul 02, 2021


நாடாளுமன்றம் ஆகஸ்ட் முதல் தேதிக்குள் கூடும்!

நாடாளுமன்றம் ஆகஸ்ட் முதல் தேதிக்குள் மீண்டும் கூடும்.

கூடும் தேதி உள்ளிட்ட விஷயங்கள் அடுத்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதிச் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார்.

மக்களவை -மேலவை என இரு அவைகளையும் உட்படுத்தி hybrid முறையிலான கூட்டத்தை நடத்தும் அணுகுமுறைகளையும் வழிவகைகளையும் அரசாங்கம் இதற்கு முன் ஆய்வு செய்து வந்ததாக அவர் சொன்னார்.

Hybrid முறையிலான கூட்டமென்பது நேரில் சிலரும், இயங்கலை வாயிலாக மற்றவர்களும் கலந்துக் கொள்ளும் முறையாகும்.

நாடாளுமன்றம் ஆகஸ்ட் முதல் தேதிக்குள் கூடும்!

மருத்துவ மற்றும் தடுப்பூசி போடும் காரணங்களுக்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் வாகனமோட்டி உட்பட ஒரு வாகனத்தில் மூவராகப் பயணிக்கலாம்.

அரச மலேசிய காவல் துறை PDRM அதனைத் தெரிவித்திருக்கிறது.

ஆயினும் அவர்கள் MySejahteraவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள கொடுக்கப்பட்ட தேதி அல்லது பிற முக்கிய ஆவணங்களை ஆதாரமாகக் காட்ட வேண்டும் என அது வலியுறுத்தியது.

நாடாளுமன்றம் ஆகஸ்ட் முதல் தேதிக்குள் கூடும்!

சாலைத் தடுப்புச் சோதனைகளின் போது பரவலாக இல்லாமல் சில வாகனமோட்டிகள் சென்ற பகுதிகள் My Sejahtera வழி பரிசோதனை செய்யப்படும்.

முழு முடக்கம் அமலில் இருந்தும் சாலைகளில் இன்னமும் அதிகமான வாகனங்கள் காணப்படுவதை அடுத்து உள்துறை அமைச்சு அவ்வாறு தெரிவித்திருக்கிறது.

அவசியத் தேவையில்லாமல் குறிப்பிட்ட வாகனமோட்டிகள் வெளியே நடமாடிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என அது எச்சரித்தது.

நாடாளுமன்றம் ஆகஸ்ட் முதல் தேதிக்குள் கூடும்!

அத்தியாவசியத் துறைகளில் இல்லாத தொழிலாளர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வேலையிடங்களுக்குச் செல்ல அனுமதி இல்லை.

அவ்வாறு நெருக்குதல் கொடுக்கப்படும் தொழிலாளர்கள் Working for Workers செயலி மூலம் புகார் கொடுக்கலாம் என மனித வள அமைச்சு தெரிவித்தது. 

வேலைக்கு வரவில்லை என்றால், நீக்கம் செய்யப்படலாம் என முதலாளிகள் தொழிலாளர்களை மருட்டும் சம்பவங்கள் குறித்து தங்களுக்கு அதிகளவில் புகார்கள் கிடைத்துள்ளதாகவும் என அது கூறியது.

நாடாளுமன்றம் ஆகஸ்ட் முதல் தேதிக்குள் கூடும்!

நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஆறாயிரத்துக்கும் கூடுதலாகவே இருக்கிறது.

புதிதாக ஆறாயிரத்து 982 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக ஈராயிரத்து தொளாயிரத்து 7 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather