← Back to list
SPM, STPM மாணவர்களுக்குத் தடுப்பூசி!
Jun 18, 2021

நாட்டில் மேலும் 74 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை நாலாயிரத்து 276 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக ஆறாயிரத்து 440 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் ஈராயிரத்து 95 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நெகிரி செம்பிலானில் இதற்கு முன் பதிவாகியிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்களின் எண்ணிக்கை மூன்றலக்கத்திற்குக் குறைந்து 870 ஆகப் பதிவாகியுள்ளது.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பதிந்து கொண்டுள்ளவர்களுக்கு நிச்சயம் தடுப்பூசி போடப்படும்.
சுகாதார அமைச்சு அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.
தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் சுமூகமாகச் சென்று கொண்டிருப்பதாக அது கூறியது.
இவ்வாண்டு தொடக்கத்திலேயே பதிந்து கொண்டிருந்தாலும், தடுப்பூசி போடத் தங்களுக்கு இன்னும் தேதி கொடுக்கப்படவில்லை என சிலர் கூறி வருவது குறித்து அமைச்சு அவ்வாறு தெரிவித்தது.

2021 ஆம் ஆண்டுக்கான SPM, STPM தேர்வெழுதும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் Covid-19 தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கு அவர்களது பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படும் என Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளர் Khairy Jamaluddin தெரிவித்திருக்கிறார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போட ஏதுவாக கிள்ளான் பள்ளத்தாக்கில் விரைவில் புதிய தடுப்பூசி மையமொன்று திறக்கப்படவுள்ளது.
அப்புதிய மையம் அடுத்த வாரத்தில் Bangi தொழில்பயிற்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில் செயல்படும் என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
தர செயல்பாட்டு நடைமுறையை மீறி செயல்படும் தொழிற்சாலைகளுக்கு இனி எச்சரிக்கை விடுக்கப்படாது.
நேரடியாக அவற்றுக்குத் தண்டம் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் Dato Seri Hamzah Zainudin எச்சரித்துள்ளார்.
நாட்டில் அதிகமான கோவிட் 19 சம்பவங்கள் பதிவாவதற்குத் தொழிற்சாலைகளை உட்படுத்திய Cluster சம்பவங்கள் பெரும் பங்காற்றுவதைச் சுட்டிக் காட்டி அமைச்சர் அவ்வாறு எச்சரித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather