Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தேசிய மீட்புத் திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!

Jun 15, 2021


தேசிய மீட்புத் திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!

நான்கு கட்டங்களை உள்ளடக்கிய Covid-19  பெருந்தொற்றில் இருந்து நாட்டை வெளியே கொண்டு வருவதற்குண்டான தேசிய மீட்புத் திட்டத்தை பிரதமர் Tan Sri Muhyiddin Yassin  அறிவித்திருக்கிறார். 

தற்போது நாட்டில் அமலில் உள்ள முழு முடக்கம் முதல் கட்டமாகக் கருதப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்குள் நுழைவது மூன்று அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். 

"Indikator pertama ialah keadaan penularan COVID-19 harian, indikator kedua penggunaan katil di wad ICU dan ketiga berdasarkan kadar peratusan vaksinasi dua dos"

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மூன்றாம் கட்டத்தின் போது கடும் தர செயல்பாட்டு நடைமுறைகளுடன் நாடாளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் சொன்னார்.

தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை 500க்குக் குறைந்ததும், நவம்பர் மாத வாக்கில் தேசிய மீட்புத் திட்டத்தின் இறுதிக் கட்டத்திற்குள் நுழைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசிய மீட்புத் திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!

நாடு முழுவதும் இதுவரை 46 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 

14 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாக இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர். 

இவ்வேளையில் பிப்ரவரி மாதம் தேசியத் தடுப்பூசி திட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மிக அதிகமான ஏறக்குறைய 2 லட்சம் பேருக்கு COVID-19 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.

மற்றொரு நிலவரத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை ஒரு கோடியே 38 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிந்து கொண்டுள்ளனர்.

தேசிய மீட்புத் திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!

அவசரப் பயன்பாட்டுக்காக இரு புதிய Covid-19 தடுப்பூசிகளுக்கு அரசாங்கம் நிபந்தனையுடன் கூடிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

சீனத் தயாரிப்பிலான CanSino தடுப்பூசி, Johnson & Johnson தடுப்பூசி ஆகியவையே அவை என சுகாதார அமைச்சு கூறியது. 

அவ்விரு தடுப்பூசிகளுக்கும் இரு டோஸ் தேவையில்லை; ஒரு டோஸ் மட்டும் போதுமானது. 

மற்றொரு நிலவரத்தில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு Pfizer தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் கிருமித் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமுள்ள தரப்புக்குதான் Pfizer தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சு விளக்கியது.

தேசிய மீட்புத் திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!

நாட்டில் புதிதாகப் ஐயாயிரத்து 419 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சிலாங்கூர், சரவாக் மற்றும் KLலில் அதிகமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

மேலும் 101 பேர் பலியாகியிருப்பதை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை நாலாயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.  

தேசிய மீட்புத் திட்டத்தை அறிவித்தார் பிரதமர்!

Covid-19 பலருக்குப் பெரும் தாக்கத்தைக் கொடுத்திருக்கும் நிலையில், உணவகங்கள் தினமும் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுள்ளது. 

அதோடு ஒரு மேசைக்கு இருவர் அமர்ந்து உண்ண அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்குமாறு மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us