← Back to list
SOP-களை தளர்த்துவதில் அவசரம் வேண்டாம்!
Jun 15, 2021
முழு பொது முடக்கத்திற்கான SOPகளை தளர்த்துவதில் அரசாங்கம் அவசரம் காட்ட தேவையில்லை!
அது தான் இப்போதைக்கு நல்லது என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
தற்போது அமுலில் உள்ள முழு MCO-வின் பலனாக தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு மிக நிதானமாக எடுக்கப்பட வேண்டுமே தவிர, அவசரப்பட்டு மீண்டும் எண்ணிக்கை உயர காரணமாகி விடக் கூடாது என மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar, The Starரிடம் தெரிவித்துள்ளார்.
உதாரணத்திற்கு, இரவுச் சந்தைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கு பதிலாக உணவகங்களில் உணவுகளை பொட்டலமிட்டு வாங்கிச் செல்வதற்கான நேரத்தை முதலில் அதிகரிக்கலாம்.
பின்னர் படிப்படியாக தேவையான தளர்வுகள் குறித்து யோசிக்கலாம் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தினசரி கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கு குறைந்தால், முழு MCOவுக்கான SOPகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என அரசாங்கம் கூறியிருந்தது தொடர்பில் அச்சங்கம் பேசியது.
ஆகக் கடைசி நிலவரப்படி, நாட்டில் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 949-ஆக பதிவானது;
ஒரே நாளில் 60 பேர் அத்தொற்றால் உயிரிழந்தனர்.
SOPகளை தொடர்ந்து பின்பற்றுங்கள்!
COVID-19 பெருந்தொற்றை வேரறுக்க, அனைவரும் தொடர்ந்து SOPகளை கடைப்பிடித்து, சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்!
இத்தொற்று ஒரு முடிவுக்கு வரும் வரை அதில் இருந்து யாரும் பின் வாங்கக் கூடாது என கூறுகின்றார் பொது சுகாதார நிபுணர் Dr Mohamad Hazizi Mohamad Hasani.
தினசரிப் பதிவாகும் சம்பவங்களை பொறுத்தே நடப்பிலுள்ள SOPகளை தளர்த்துவதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க முடியும் என அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தது.
வேலையிட clusterகள் கவலையளிக்கின்றன!
வேலையிடங்களில் உருவாகும் COVID-19 clusterகளின் எண்ணிக்கை கவலையளிகின்றது!
இதுவரை நாடு முழுவதும் ஆயிரத்து 328 clusterகள் வேலையிடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதில் ஏறக்குறைய 70 விழுக்காட்டு clusterகள், அந்நிய நாட்டு தொழிலாளர்களை, அதிலும் குறிப்பாக உற்பத்தி துறையை உட்படுத்தியிருக்கின்றது.
அந்த clusterகளின் கீழ் இதுவரை மொத்தமாக ஒரு லட்சத்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான COVID-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு கூறியது.
ஆகக் கடைசியாக பதிவான 17 clusterகளில், 12 clusterகள் வேலையிடத்தில் உருவானவை என்றும் அமைச்சு தெரிவித்தது.
இதுவரை இல்லாத அளவுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன!
பிப்ரவரி 24ஆம் தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கியத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் ஏறக்குறைய மிக அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
நேற்று மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு COVID-19 தடுப்பூசிகள் போடப்பட்டன.
அதில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முதல் டோஸ் போட்டுக் கொண்டனர்.
எஞ்சியவர்கள் 2ஆம் டோஸ் போட்டு முடித்தனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather