← Back to list
ஒலிம்பிக்கிற்கு மலேசியா தயார்!
Jun 14, 2021
அடுத்த மாதம் தொடங்கவுள்ள தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இதுவரை 27 தேசிய விளையாட்டாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்
இன்னும் Gymnastic, முக்குளிப்பு, அம்பெய்தல், கராத்தே ஆகிய பிரிவுகளிலிருந்து, அந்த அனைத்துலக போட்டிக்குத் தகுதி பெறும் விளையாட்டாளர்கர்ளின் பெயர் பட்டியலுக்காகத் தமது தரப்பு காத்திருப்பதாக, மலேசிய ஒலிம்பிக் மன்றத் தலைமைச் செயலாளர் Datuk Nazifuddin Najib தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய விளையாட்டாளர்களின் எண்ணிக்கையில் இவ்வாண்டு பெரியளவில் மாற்றமில்லை என கூறிய அவர், வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும், மலேசியாவிலிருந்து 26 முதல் 32 விளையாட்டாளர்கள் வரை செல்வர் எனச் சொன்னார்.
எல்லா விளையாட்டாளர்களுக்கும் தடுப்பூசியும் போடப்படுகிறது. எனவே அவர்களின் பாதுகாப்பு எந்நேரமும் உறுதிச் செய்யப்பட்டு வருகிறது என்றாரவர்.
இதனிடையே நாட்டில் அமுலில் இருக்கும் பொது முடக்கம் தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய விளையாட்டாளர்களின் ஆயத்த நடவடிக்கைகளைப் பாதிக்கவில்லை!
அந்த அனைத்துலக போட்டிக்குத் தகுதி பெற்றது முதலே, தேசிய விளையாட்டாளார்களை பயிற்சியைத் தொடக்கியிருப்பதால், அவர்களுக்குப் போதுமான கால அவகாசம் இருந்ததாகவும் அவர் சொன்னார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather