← Back to list
பாராலிம்பிக்கிற்கு முதல் முறை செல்கிறேன்- மகிழ்ச்சியில் சுரேஷ்!
Jun 14, 2021
முதல் முறையாக பாராலிம்பிக் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து விளையாடவிருப்பதை எண்ணி மிகுந்த ஆவலுடன் இருக்கின்றார் தேசிய பாரா அம்பெய்தும் வீரர் S சுரேஷ்.
மகிழ்ச்சி ஒருபுறமிருக்க, நாட்டைப் பிரதிநிதிப்பதை எண்ணி சற்று பதற்றமாக இருப்பதும் மறுப்பதற்கில்லை என அவர் கூறினார்.
இந்த பொது முடக்க காலகட்டத்திலும் அந்த அனைத்துலக போட்டிகுத் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள அல்லும் பகலும் உழைத்து வருவதாகத் தெரிவித்த அவர், அப்போட்டியில் நல்ல முடிவை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதாகச் சொன்னார்.
கோவிட் 19 பெருந்தொற்று தங்களின் ஆயத்த வேலைகளை வெகுவாக பாதித்திருப்பது மறுப்பதற்கில்லை;
எனினும் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள தாங்கள் தவறவில்லை என, சுரேஷ் கூறுகின்றார்.
சுரேஷுடனான ராகாவின் முழு நேர்க்காணலைக் கேட்க கீழ் காணும் இணைப்பை சொடுக்குங்கள்:-
player.whooshkaa.com/episode?id=840067
இந்த பெருந்தொற்றும் முழு முடக்கமும் தம்மை மனதளவில் பாதிக்கவில்லை என்று கூறிய அவர், நிலைமைக்கேற்றவாறு தாம் தம்மை பழக்கப்படுத்திக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்றும் சொன்னார்
இதனிடையே பாராலிம்பிக் போட்டிக்கு முழு மூச்சாகத் தயாராகி வரும் நமது சுரேஷ் என்னென்ன சவால்களைச் சந்தித்தார் என கேட்ட போது, போட்டிகளில் பங்கேற்க இந்த காலகட்டத்தில் தம்மால் வெளியூர்களுக்குச் செல்ல முடியாததே வருத்தம் என சொன்னார்.
அனைத்துலக போட்டியொன்றுக்குத் தயாராகும் போது, இது மாதிரியான சிறு சிறு போட்டிகளில் பங்கேற்பது, தங்களின் நம்பிக்கையைக் கூட்டும் என்பதோடு போட்டிக்குத் தங்களைத் தயார் படுத்தும்.
பெருந்தொற்று காரணமாக ஏராளமான போட்டிகள் ரத்து செய்யப்பட்டதோடு, ஒத்தி வைக்கப்பட்டிருப்பதும் தங்களின் பயிற்சிக்கு சிறு தடையாக இருந்தது என்றாரவர்.
பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள மொத்தம் 13 தேசிய விளையாட்டளர்களில், 2019ஆம் ஆண்டு உலக பாரா அம்பெய்தும் போட்டியில் தங்கம் வென்ற நமது சுரேஷும் ஒருவராவார்.
ஜப்பானில் வரும் ஆகஸ்டு மாதம் நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல சுரேஷை மனமார வாழ்த்துவோம்!
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather