Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

66 விழுக்காட்டினருக்கு COVID-19-னுக்கு பிந்திய அறிகுறிகள்!

Jun 12, 2021


 

COVID-19 தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களில் ஏறக்குறைய 66 விழுக்காட்டினர் குறைந்தது 12 வாரங்களுக்கு அத்தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

4 மற்றும் ஐந்தாம் கட்ட COVID-19 பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்த ஆயிரத்திற்கும் அதிகமானோரை உட்படுத்திய மருத்து ஆய்வில் அது கண்டுப்பிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

கொரோனா தொற்று அவர்களது உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் ஏற்படுத்திய பாதிப்புகள் அதற்கு காரணம் என்றும் அமைச்சு தெரிவித்தது.

66 விழுக்காட்டினருக்கு covid-19-னுக்கு பிந்திய அறிகுறிகள்!

அதிகப்படியான உடல் சோர்வு, தூக்கமின்மை, மூச்சுத் திணறல், இருமல், பதற்றம் ஆகியவை சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி அனுபவிக்கக்கூடிய உபாதைகளில் அடங்கும் என அமைச்சு தெரிவித்தது.

எனவே, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த பிறகும், உடலில் அத்தொற்றுக்கான அறிகுறிகல் கொண்டிருப்போர் அருகிலுள்ள கிளினிக் அல்லது மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைப் பெற்று கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

இதனிடையே, நேற்று ஒரே நாளில் ஏழாயிரத்து 749 பேர் COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்!

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியப் பிறகு, முதன் முறையாக பதிவாகியுள்ள மிகப் பெரிய எண்ணிக்கையாக அது திகழ்கின்றது.

இதனையும் சேர்த்து அத்தொற்றில் இருந்து இதுவரை மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 78 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று நாட்டில் ஆறாயிரத்து 849 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் 84 பேர் அத்தொற்றுக்கு பலியாகினர்.

இதையடுத்து மொத்த மரண எண்ணிக்கை மூவாயிரத்து 768 ஆக அதிகரித்தது.



Sinovac தடுப்பூசி பயன்படுத்த மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை!

மூன்றில் இருந்து 17 வயது வரையிலானவர்களுக்கு Sinovac COVID-19 தடுப்பூசியை போடுவது குறித்து ஆராயுமாறு மருத்துவ நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

66 விழுக்காட்டினருக்கு covid-19-னுக்கு பிந்திய அறிகுறிகள்!

அதிகமான சிறார்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதை சுட்டிக்காட்டி அவர்கள் NSTயிடம் இதனை தெரிவித்துள்ளனர்.

அவசர தேவைகளில் அந்த தடுப்பூசியை சிறார்கள் உட்பட 17 வயது வரையிலானவர்களுக்கு பயன்படுத்த சீனா அங்கீகாரம் வழங்கியிருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் அவர்கள் கருத்துரைத்தனர்.

 

முழு பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது!

நடப்பில் உள்ள முழு பொது முடக்கம் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது!

நாட்டில் தினசரிப் பதிவாகி வரும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் ஐயாயிரத்திற்கு மேல் இருப்பதால், முழு MCOவை ஜூன் 15 முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

66 விழுக்காட்டினருக்கு covid-19-னுக்கு பிந்திய அறிகுறிகள்!

தொழிற்சாலை, வணிகம் மற்றும் வியாபாரத் துறைகளுக்கான SOPகள் இதற்கு முன் அறிவிக்கப்பட்டதை போலவே பின்பற்றப்படும்;

 அதில் மாற்றம் இல்லை என Datuk Seri Ismail Sabri சொன்னார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather