← Back to list
ஆதரவு ஆவணங்கள் அவசியமில்லை!
Jun 10, 2021
நாட்டில் மேலும் 73 பேர் Covid-19 கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.
அதனை அடுத்து மொத்த மரண எண்ணிக்கை மூவாயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக ஐயாயிரத்து 671 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 510 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
KL, சரவாக், நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகியவற்றில் கூட அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் இதுவரை ஏறக்குறைய 40 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி போட பதிந்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 52.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதுவரை ஒரு கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிந்து கொண்டுள்ளனர்.
தங்களது கல்விக் கடனுதவித் தொகையைத் திருப்பிச் செலுத்துவதை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க விரும்புவோர், விண்ணப்பத்துடன் ஆதரவு ஆவணங்கள் எதனையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என தேசிய உயர்க்கல்வி நிதிக் கழகம் PTPTN தெரிவித்திருக்கிறது.
வேலை இழந்தவர்கள், வருமானம் குறைக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கும் அது பொருந்தும்.
சம்பந்தப்பட்டவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கடனுதவித் தொகையைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்க விண்ணப்பிக்கலாம்.
பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த வாரம் தொடங்கி மாணவர்கள் வீட்டில் இருந்தே கற்றல்-கற்பித்தலை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்திருப்பதை தேசிய பெற்றோர், ஆசிரியர் சங்க நல்லிணக்க மன்றம் வரவேற்றுள்ளது.
அது காலச் சூழலுக்கு ஏற்ற பொருத்தமான முடிவு எனக் குறிப்பிட்ட PIBGN, எனினும் மாணவர்கள் இணையம் வழி நல்ல முறையில் கல்வி கற்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
மாணவர்களுக்குத் தேவையான மின்னியல் சாதனங்களை வழங்குவது, நிலைத்தன்மையான இணையச் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் முறையாக ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.
COVID-19 பெருந்தொற்றுக்கு மத்தியிலும், 2019ஆம் ஆண்டைக் காட்டிலும், 2020ஆம் ஆண்டு SPM தேர்வுக்கான தேசிய சராசரி தேர்ச்சி விகிதம் மேம்பட்டிருக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் பதிவான மிகச் சிறந்த தேர்ச்சி நிலை அதுவாகும்.
இதனிடையே SPM தேர்ச்சி அறிக்கையை அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி மாணவர்கள் கல்வியமைச்சின் அகப்பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2020 SPM மாணவர்கள் UPU Onlineயில் தங்களது விண்ணப்பங்களைச் சரி செய்து மீண்டும் அனுப்ப வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வரும் 15 ஆம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு அவர்கள் தங்களது விவரங்களைச் சரி செய்யலாம் என உயர்க்கல்வி அமைச்சு கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather