← Back to list
ஒரு நாளில் 5 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட வேண்டும்!
Jun 08, 2021
ஆண்டு இறுதிக்குள், நாடு கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைய வேண்டுமானால், ஒரு நாளில் 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் பேருக்கு COVID-19 தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் NSTயிடம் கூறியுள்ளார்.
COVID-19 தற்போது சமூகத்தில் மிக எளிதாகி பரவும் தொற்றாகி விட்டது;
அதுவும் ஏறக்குறைய 60 முதல் 80 விழுக்காட்டு கொரோனா சம்பவங்கள், மிகச் சாதாரணமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
நாடு 80 விழுக்காட்டு கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைந்த பிறகு, சிறார்களை தடுப்பூசி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
SOPகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்!
நாட்டில் COVID-19 தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு மலேசியர்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.
நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க நாம் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள் குறித்து விவரிக்கின்றார், மலேசியப் பொது மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Arrifin Omar
“kita mesti mencegah daripada berlaku jangkitan Covid-19 melalui amalan SOP yang ketat. Yang kedua kita mesti mengambil vaksin apabila tiba masanya dan ketiga hendaklah kita cepat menghubungi kemudahan kemudahan kesihatan apabila berlaku kes yang agak teruk di rumah.”
COVID-19 தடுப்பு SOPகளை மேலோட்டமாக அல்லாமல் கடுமையாக பின்பற்ற வேண்டும்.
COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்; இறுதியாக, கொரோனாவை உட்படுத்திய அவசர தேவைகளுக்கு மருத்துவமனையை நாட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
சிலர் அத்தொற்றினால் பாதிக்கப்பட்டு, மிக தாமதமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள செல்வதும் கூட, மரண எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைவதாக Dr Zainal Arrifin கூறியுள்ளார்.
ஆகக் கடைசியாக, 82 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
இதையடுத்து மொத்த மரண எண்ணிக்கை மூவாயிரத்து 460ஆக உயர்ந்துள்ளது.
இவ்வேளையில், கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு, நாட்டில் தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்திற்கு இறங்கியுள்ளது.
நேற்று புதிதாக ஐயாயிரத்து 271 பேருக்கு COVID-19 தொற்று உறுதியான வேளை, சிலாங்கூரிலும் அவ்வெண்ணிக்கை குறைந்துள்ளது.
அம்மாநிலத்தில் நேற்று ஆயிரத்து 374 பேர் மட்டுமே அத்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வேலைக்குச் செல்வதற்கான அனுமதி கடிதம்!
இன்று முதல், 6 அமைச்சுகள் மற்றும் குறிப்பிட்ட அரசு நிறுவனங்கள் வெளியிடும் வேலைக்குச் செல்வதற்கான அனுமதி கடிதங்கள் மட்டுமே, சாலை தடுப்புச் சோதனைகளின் போது ஏற்றுக் கொள்ளப்படும்!
இறப்பு, அவசர தேவை மற்றும் சொந்த வேலைக்குச் செல்வோருக்கான பெர்மிட்டுகளை காவல் துறை வெளியிடும் என, தேசிய காவல் படைத் தலைவர் கூறியுள்ளார்.
அந்த அனுமதி கடிதங்களை காட்டாதவர்கள் அல்லது பொய்யான கடிதங்களை காட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என IGP எச்சரித்துள்ளார்.
MySejahtera செயலி: விவரங்களை புதுப்பிக்காதோருக்கு தண்டம் விதிக்கப்படாது!
MySejahtera செயலியில், உடல் சுகாதார நிலை உள்ளிட்ட விவரங்களை புதுப்பிக்காதோருக்கு தண்டம் விதிக்கப்படாது!
காரணம் அது குற்றம் அல்ல என, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இதற்கு முன் விதிக்கப்பட்ட அதன் தொடர்பில் விதிக்கப்பட்ட அனைத்து தண்டங்களும் ரத்துச் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் சொன்னார்.
கட்டாயம் இல்லை என்றாலும், MySejahtera செயலியில் உள்ள தகவல்களை அவ்வப்போது சரிப்பார்த்து புதுப்பித்துக் கொள்வது அவரவர் கடமை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அருகில் உள்ள பகுதிகளில் மட்டுமே அனுமதி!
முழு பொது முடக்கம் அமுலில் உள்ள காலக்கட்டத்தில், தங்களது குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மட்டுமே பொது மக்கள் மெதுவோட்ட உடற்பயிற்சியில் ஈடுபட முடியும்.
அதற்கு அப்பாற்பட்ட பகுதிக்குச் செல்பவர்களுக்கு தண்டம் விதிக்கப்படும் என, காவல் துறை எச்சரித்துள்ளது.
பொது மக்களின் அடையாள அட்டைகளை பரிசோதிப்பது, அவர்கள் இருப்பிடம் குறித்து விசாரிப்பது, அதற்கான ஆதாரத்தை கேட்பது ஆகியவற்றுக்கு அமுலாக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும் அத்துறை நினைவுறுத்தியது.
அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம்!
முழு பொது முடக்க காலக்கட்டத்தில் பலசரக்கு மற்றும் மளிகைக் கடை நடத்துநர்கள், தங்களது கடைகளில் உள்ள அனைத்து வகையான பொருட்களையும் விற்கலாம்!
அதற்கு எந்த தடையும் இல்லை என, தேசிய பாதுகாப்பு மன்றம் Sin Chew நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெளிவுப்படுத்தியிருக்கின்றது.
அக்கடைகளில், அத்தியாவசியம் இல்லாதப் பொருட்களை விற்க அனுமதி இல்லை என கூறி, உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சின் அண்மைய SOP பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது தொடர்பில் MKN பேசியது.
இதன் தொடர்பில் பேசிய அமைச்சு, இவ்விவகாரத்தில் MKNனின் ஆலோசனைப் பின்பற்றப்படும் என தெரிவித்தது.
பலசரக்கு மற்றும் மளிகைக் கடைகளில் ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் பொருட்களை வாங்குவதை தடுக்கவே முன்னதாக அந்த அறிவிப்பு கொண்டு வரப்பட்டதாக அமைச்சு கூறியது.
பல கடைகள், அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத பகுதிகளை தற்காலிகமாக வாடிக்கையாளர்களுக்கு மூடி வைத்த புகைப்படங்களை, பொது மக்கள் முன்னதாக தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி!
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் COVID-19 தடுப்பூசி இலவசமாக போடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்திய மக்கள் தொகையில் வயது வந்தோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 950 மில்லியன் ஆகும் ;
ஆனால் இதுவரைக்குமான நிலவரப்படி அவர்களில் வெறும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, மாநிலங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை ஜூன் 21ஆம் தேதி தொடங்கி மத்திய அரசு கையாளும் என மோடி அறிவித்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather