← Back to list
2 மணி நேர கட்டுப்பாடு இனி இல்லை!
Jun 07, 2021
வியாபாரத் தளங்களில் பொது மக்கள் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் இருக்க கூடாது என்ற விதிமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது!
60 விழுக்காட்டு ஊழியர்கள் தான் வேலை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டின் கீழ் வியாபாரத் தள முகப்புகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
இந்த கட்டுப்பாட்டினால் பேரங்காடிகளில் அதிகமான பொது மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காக பதற்றத்துடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையை ஊழியர்களால் சமாளிக்க முடியாமல் போகலாம் என்ற அச்சத்தால் தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
----
தேசிய கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்று மட்டும் 81 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
அவற்றுள் 79 ஆயிரம் முதல் டோசும் ஆயிரத்துக்கும் அதிகமான இரண்டாம் டோசும் அடங்கும்.
இதனிடையே தடுப்பூசி போட பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 52.40 விழுக்காட்டை எட்டியுள்ளது.
அவ்வெண்ணிக்கை 1 கோடியே 27 லட்சம் பேராகும்.
-----
கூட்டரசு பிரதேச மக்களுக்கு நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் டோஸ் தடுப்பூசிகளை போடும் இலக்கை நோக்கிய முயற்சியாக, வரும் 15ஆம் தேதி முதல் நடமாடும் தடுப்பூசி truck-குகள் இயக்கப்படவிருக்கின்றன.
PPR உள்ளிட்ட மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும், அதிகமானோர் வேலை செய்யும் தொழிற்பேட்டைகளையும் மையப்படுத்தி மொத்தம் 40 truckகுகள் செயல்படும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் கூட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அடையும் அரசாங்கத்தின் இலக்கிற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
-----
நாடு முழுவதும் ஏறக்குறைய பத்து லட்சம் முதியோர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையாவது போட்டுக் கொண்டுள்ளனர்.
இரண்டு லட்சத்து 30 ஆயிரம் முதியோர்கள் இரு டோஸ் தடுப்பூசியை போட்டு முடித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 60 வயதுக்கு மேற்பட்ட 35 லட்சம் முதியோரில் 60 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொள்ள MySejahtera செயலியில் பதிந்து கொண்டுள்ள தகவலையும் மகளீர் குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
-----
நாளை தொடங்கி ஆறு அமைச்சுகள் மற்றும் குறிப்பிட்ட அமைப்புகள் அங்கிகரித்த அனுமதி கடிதங்கள் மட்டுமே சாலை தடுப்புச் சோதனையின் போது ஏற்றுக் கொள்ளப்படும்.
அக்கடிதமானது சம்பந்தப்பட்ட நபர் வேலைக்கு வந்து போவதற்கு அனுமதி வழங்கும் சான்றாக அமையும் என தேசிய காவல் படை தலைவர் தெரிவித்தார்.
சுய வேலை செய்பவர்கள், One off பயண பெர்மிட் வைத்திருப்பவர்கள் காவல் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்றாரவர்.
----
நாட்டில் கோவிட் 19 தொடர்பில் நேற்று பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 241ஆகக் குறைந்துள்ளது.
சிலாங்கூரில் ஈராயிரத்து 100க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின.
ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் அத்தொற்றிலிருந்து குணமடைந்த வேளை, 87 மரணங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather