Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19 தடுப்பூசி: கட்டாயமாக்குவது பரிசீலிக்கப்படவிருக்கிறது!

Jun 04, 2021


covid-19 தடுப்பூசி: கட்டாயமாக்குவது பரிசீலிக்கப்படவிருக்கிறது!

நாடு முழுவதும் புதிதாக ஏழாயிரத்து 748 Covid-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில் தொடர்ந்து மிக அதிகமான ஈராயிரத்து 612 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

KL, சரவாக், ஜொகூரிலும் கூட அதிகமான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

covid-19 தடுப்பூசி: கட்டாயமாக்குவது பரிசீலிக்கப்படவிருக்கிறது!

Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதைக் கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவிருப்பதாக பிரதமர் கூறியிருக்கிறார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளப் பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கூட்டு எதிர்ப்புச் சக்தி இலக்கை அடையாவிடில், அப்பரிந்துரை குறித்து ஆராய தடுப்பூசி கையிருப்பு உத்தரவாத சிறப்புச் செயற்குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக Tan Sri Muhyiddin Yassin சொன்னார்.

கூட்டு எதிர்ப்புச் சக்தி இலக்கை முன் கூட்டியே அடைய, தடுப்பூசி போடும்  நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் தடுப்பூசி போடும் மையங்களை அதிகரிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

covid-19 தடுப்பூசி: கட்டாயமாக்குவது பரிசீலிக்கப்படவிருக்கிறது!

தடுப்பூசிக்கு எதிரான தரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்திருக்கிறார். 

தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என அவர்கள் பிறரைத் தூண்டி வந்தால், அது அரசாங்கத்தின் தேசிய தடுப்பூசித் திட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

தேசிய தடுப்பூசித் திட்டத்தை வெற்றி பெறச் செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம்  என பிரதமர் வலியுறுத்தினார். 

covid-19 தடுப்பூசி: கட்டாயமாக்குவது பரிசீலிக்கப்படவிருக்கிறது!

தாய்லாந்தில் உள்ள இரண்டாவது தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து covid 19 Astrazeneca தடுப்பூசியை மலேசியா பெறவிருக்கிறது. 

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பயன்படுத்துவதற்காக நிபந்தனையுடன் கூடிய பதிவு அங்கீகாரம் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது. 

தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை அது விரைவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

covid-19 தடுப்பூசி: கட்டாயமாக்குவது பரிசீலிக்கப்படவிருக்கிறது!

மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக கூடிய விரைவில் வாகனத்தில் இருந்தவாறே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் drive thru மையம் திறக்கப்படவிருக்கிறது. 

அடுத்த வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு கூறியது.

covid-19 தடுப்பூசி: கட்டாயமாக்குவது பரிசீலிக்கப்படவிருக்கிறது!

நாட்டில் சில பகுதிகளில் கூடுதல் வாகனங்கள் காணப்படுவதை அடுத்து, நாளொன்றுக்கு சாலை தடுப்புச் சோதனையின் எண்ணிக்கையை ஆயிரத்திற்கு அதிகரிக்க உள்துறை அமைச்சு உத்தேசித்துள்ளது. 

இதனிடையே நீண்ட விடுமுறையையொட்டி திங்கட்கிழமை வரை பேரங்காடிகளை அணுக்கமாகக் கண்காணிக்கவிருப்பதாகவும் அது கூறியது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather