← Back to list
COVID-19 மொத்த மரண எண்ணிக்கை 26 ஆயிரத்தை தொடலாம்!
Jun 03, 2021
நாட்டில் COVID-19 தொற்றின் மொத்த மரண எண்ணிக்கை செப்டம்பர் வாக்கில் 26 ஆயிரத்தை தொடும் என ஆய்வு காட்டுகின்றது!
நடப்பிலுள்ள கொரோனா சீற்றத்தை அடிப்படையாக வைத்து, அமெரிக்கா Washington பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த எண்ணிக்கை கணிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் WHOவின் அறிவியல் மன்ற உறுப்பினர் பேராசிரியர் Datuk Dr Adeeba Kamarulzaman தெரிவித்துள்ளார்.
தற்போது பதிவாகி வரும் COVID-19 தொற்று தொடர்பான மரணங்களை காட்டிலும், அந்த எண்ணிக்கை 9 மடங்கு அதிகம் என்றும் அவர் சொன்னார்.
அதே சமயம், ஆகஸ்ட் மாத இறுதி வாக்கில் நாட்டில் தினசரிப் பதிவாகும் மரணங்கள் எண்ணிக்கை 200 வரை அதிகரிக்கலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மலேசியாவில், மாரடைப்புக்கு அடுத்த நிலையில், அதிக மரணங்களை விளைவிக்கும் காரணிகளில், இந்த COVID-19 தொற்று 2ஆவது இடத்தைப் பிடிக்கும் என்றும், தொற்று நோய் சிகிச்சை நிபுணருமான Dr Adeeba, Sinar Harianனிடம் கூறியுள்ளார்.
எனவே, இனியும் அலட்சியமாக இல்லாமல், இந்த முழு பொது முடக்கக் காலக் கட்டத்தில் அனைத்து SOP-களையும் பின்பற்றி மக்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்றார் அவர்.
ஆகக் கடைசி நிலவரப்படி, நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 126 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.
இதையடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஈராயிரத்து 993ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து 11ஆவது நாளாக மிக அதிகமானகொரோனா சம்பவங்களை பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் திகழ்கின்றது.
நேற்று நாட்டில் பதிவான ஏழாயிரத்து 703 COVID-19 சம்பவங்களில், ஈராயிரத்து 728 கொரோனா சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.
இன்னும் 82 ஆயிரத்து 274 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பிள்ளைகளை கவனியுங்கள்!
COVID-19 தொற்றில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!
சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah அவ்வாறு கூறியிருக்கின்றார்.
நாட்டில் சிறார்கள் மற்றும் குழந்தைகள் என 82 ஆயிரத்திற்கும் அதிகமானோர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலை அவர் கோடி காட்டினார்.
அமைச்சு வெளியிடும் இத்தகைய தகவல்களை மனதில் வைத்து, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பில் இன்னும் அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்பதே தனது எதிர்பார்ப்பு என Dr Noor Hisham சொன்னார்.
அடிக்கடி பிள்ளைகளின் நடமாட்டத்தை கவனிப்பது, அவர்கள் வீட்டிலேயே இருப்பதை உறுதிச் செய்வது, கூட்டம் அதிகம் உள்ள அல்லது கொரோனா தொற்று ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்லாமல் இருப்பது, அப்படியே பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல நேர்ந்தால் அவர்களுக்கு சுவாசக் கவசம் அணிவிப்பது ஆகியவற்றை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாரவர்.
பிள்ளைகளை பேரங்காடிகள், பொதுச் சந்தைகளுக்கு அழைத்துச் செல்வது நிறுத்தப்பட வேண்டும் என Dr Noor Hisham கேட்டுக் கொண்டார்.
வீட்டிற்கு தேவையான அன்றாடப் பொருட்களை இணையம் வழி வாங்கும் முறையை இயன்றவரை பயன்படுத்தலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
தளவாடப் பொருள் தொழிற்சாலையை மூட உத்தரவு!
முழு பொது முடக்கம் அமுலில் உள்ள இக்காலக்கட்டத்தில், தங்களது பெர்மிட் விண்ணப்பத்தில் பொய்த் தகவலை வழங்கியதாக நம்பப்படும் சிலாங்கூர் Balakongகில் உள்ள தளவாடப் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டுப் பொருட்களுக்கான பிரிவில் அந்த பெர்மிட்டுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டு தளவாடப் பொருள் தயாரிப்பு என்பது அத்தியாவசிய தேவைக்கான பட்டியலில் வராது;
அதோடு, அதன் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்பதால், முழுமையான MCO காலக்கட்டத்தில் அத்தகைய தொழிற்சாலையை திறக்க அனுமதி கிடையாது என, உள்துறை அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
ERL சேவை ரத்து!
நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி ERL விரைவு ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்துச் செய்யப்படுகின்றன.
முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை அச்சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather