← Back to list
பள்ளி பேருந்துகளையும் கருத்தில் கொண்டதற்கு நன்றி!
Jun 02, 2021
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் நோக்கில் PEMERKASA PLUS திட்டத்தை அறிவித்த அரசாங்கம், அதில் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது!
இதுவே மலேசிய தேசிய பள்ளி பேருந்து ஒருங்கிணைந்த உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தின் தலைவர் Dr முருகா மலை -யின் கருத்து.
''இந்த பெருந்தொற்று கடந்த ஓராண்டாக கொடுத்து வரும் பெருமளவிலான தாக்கத்தால் எங்களைப் போலவே எல்லா துறையினரும் பலத்த பண நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பது மறுக்க முடியாது ஒன்று.
இதனால் அரசாங்கத்தையே இல்லை பெற்றோர்களையே குறை கூறுவது எவ்விதத்திலும் நியாயமாகாது என்பதை நாங்கள் நன்கறிவோம்''என்றாரவர்.
எனினும் பாரபட்சம் பார்க்காமல் எங்களுக்கும் சிறு தொகையை ஒதுக்கியிருக்கும் அரசாங்கத்தின் செயலுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
இந்த உதவி போக, தங்களுக்காகவே பிற உதவி திட்டங்களும் இருந்து வருவதால், குறைந்தபட்சம் வாழ்க்கையைத் தங்களால் சீராக ஓட்ட முடிவதையும் முருகா குறிப்பிட்டார்.
தங்களின் நிலையையும் கருத்தில் கொண்டு நிதியுதவி திட்டத்தை அறிவித்த பிரதமருக்கும், அரசாங்கத்திற்கும் Dr முருகா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
PEMERKASA PLUS திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்குத் தலா 500 ரிங்கிட் One off தொகை வழங்கப்படும் என பிரதமர் முன்னதாக அறிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather