← Back to list
12 வயதுக்கு கீழ்பட்ட சிறார்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை!
Jun 02, 2021
முழு பொது முடக்கம் அமுலில் உள்ள காலக்கட்டத்தில், 12 வயதுக்கு கீழ்பட்ட சிறார்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதியில்லை!
4 முக்கிய காரணங்கள் தவிர்த்து, அவர்கள் எந்த பொது இடங்கள் அல்லது வளாகங்களுக்குச் செல்ல அனுமதி இல்லை என, தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆக புதிய SOPகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபத்து அவசரம், மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் உடற்பயிற்சி ஆகியவை தான் அந்த 4 காரணங்கள் என MKN கூறியிருக்கிறது.
நாட்டில் 82 ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள் மற்றும் குழந்தைகள் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவங்களை சுகாதார அமைச்சு ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தது.
அவர்களில் ஏறக்குறைய 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் 4 வயதுக்கும் கீழ்பட்ட பிள்ளைகள் ஆவர்.
SOP மீறல்: ஏறக்குறைய 700 பேர் கைது!
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ், நேற்று முன்தினம் SOPகளை மீறிய குற்றத்திற்காக ஏறக்குறைய 700 பேர் கைதாகினர்.
அவர்களில் 630 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்ட வேளை, 45 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
எஞ்சிய 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
ஆக அதிகமாக 175 சம்பவங்கள் சுவாசக் கவசம் அணியாத குற்றத்தை உட்படுத்தியுள்ளன.
அனுமதியில்லாத பயணம், உணவகங்களில் அமர்ந்து உணவு உண்டது, தனிமனித இடைவெளியை பின்பற்றாதது உள்ளிட்ட குற்றங்களும் பதிவாகியுள்ளன.
இவ்வேளையில், நாடு முழுவதும், காவல் துறையின் சாலைத் தடுப்புச் சோதனைகள், நடமாடும் கண்காணிப்பு வாகனங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உதவ, மலேசிய ஆயுதப் படையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
COVID-19: சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் நேற்று மேலும் ஏழாயிரத்து 105 பேர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று மிக அதிகமான COVID-19 மரணங்களை பதிவு செய்த மாநிலமாக சிலாங்கூர் விளங்குகின்றது.
சிலாங்கூரில் ஒரே நாளில் 28 பேர் அத்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம் பதிவாகிய 71 மரணங்களில் அவ்வெண்ணிக்கை அடங்கும் என, சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஆக இள நபருக்கு 27 வயது என குறிப்பிட்ட அமைச்சு, அவருக்கு ஆஸ்மா பிரச்னை இருந்ததாகவும் கூறியது.
MRT பயணிகள் COVID-19 பரிசோதனை மேற்கொள்ளவும்!
கடந்த மே 27ஆம் தேதி, மாலை மணி 6.40-க்கு, Bukit Bintangகில் இருந்து Kajang-கிற்கான MRT ரயில் சேவை, இரவு 7 மணிக்கு பிறகு காஜாங்கில் இருந்து சிரம்பானுக்கான KTM ரயில் சேவையைப் பயன்படுத்தியவர்கள், COVID-19 பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அன்றைய தினம், அந்த ரயில்களில் இருந்த பயணிக்கு COVID-19 தொற்றுப் பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பள உதவித் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் நீட்டிப்பு!
சம்பள உதவித் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம், ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கத்தினால் பாதிக்கப்படும் அனைத்து பொருளாதார துறைகளுக்குமான சம்பள உதவித் தொகை திட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக, PEMERKASA PLUS உதவித் திட்டத்தின் வாயிலாக பிரதமர் அறிவித்ததே அதற்கு காரணம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather