← Back to list
உலக புகையிலை அற்ற தினம்!
Jun 01, 2021
சாதரண மனிதர்களை விட புகை பிடிப்பவர்களுக்கு கோவிட் 19 தொற்றின் தாக்கம் மிக மோசமான விளைவுகளைக் கொண்டு வரும்!
மலேசிய புகையிலை கட்டுப்பாட்டு மன்றத்தைச் சேர்ந்த Dr M முரளிதரன் அவ்வாறு கூறுகின்றார்.
காரணம் புகைப்பிடிவர்களுக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதோடு, கோவிட் தொற்றும் பெரும்பாலும் நுரையீரலைத் தான் தாக்கும் என Dr முரளிதரன் விளக்கினார்.
வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியினால் அப்பெருந்தொற்று புகைப்பிடிப்பவர்களுக்கு எளிதில் தொற்றக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட ஏராளமான வழிகள் உள்ளன!
முதல் வழி இன்றே செயலில் இறங்குங்கள் என்றாரவர்.
அடுத்த படியாக, ஏன் இப்பழக்கத்தைக் கைவிடுகிறோம் என்ற காரணத்தை மீண்டும் மீண்டும் மனதில் சொல்லிக் கொண்டு, மனதை அதற்கேற்றாற்போல் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார்.
இவற்றை செய்தும் உடலில் பெருமளவில் மாற்றங்களையும் சில உபாதைகளையும் காண்கிறோமே என கேட்பவர்களுக்கு, உபாதைகள் வருவது மிக வழக்கமான ஒன்று; இரண்டு மூன்று வாரங்களுக்கு அது தொடரும், பின்னர் அதுவாகே குணமடைவது இயல்பான ஒன்று என Dr முரளிதரன் தெரிவித்தார்.
புகைப்பிடிப்பவர்களுக்கும் புகைப்பிடிக்காதவர்களுக்கும் கோவிட் 19 தொற்றை தடுப்பதற்கென தனித்தனி முறைகள் இல்லை!
அப்பெருந்தொற்றைத் தவிர்க்க யாராக இருந்தாலும் சுவாசக் கவசம் அணிதல், தூர இடைவெளியைப் பின்பற்றுதல், சுத்தமாக இருத்தல் போன்ற பொதுவான விதிமுறைகள் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் Dr முரளிதரன்.
ஆனால் புகைப்பிடிப்பவர்களுக்கே கோவிட் 19 தொற்று பரவல் எளிதில் பீடிக்கவும், அதன் தாக்கத்தை மோசமாக்கவும் அதிக வாய்ப்பிருப்பதாக அவர் கூறுகின்றார்.
புகையிலை பழக்கத்தைக் கைவிடுவோம் என்ற கருபொருளில் இன்று அனுசரிக்கப்படும் உலக புகையிலை அற்ற தினத்தை ஒட்டி, ராகா செய்தி பிரிவு நடத்திய நேர்க்காணலில் Dr முரளிதரன் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather