← Back to list
பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்!
May 30, 2021
நாட்டி உணவு கையிருப்பு போதுமான அளவு இருக்கின்றது!
எனவே பதற்றத்தில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்குமாறு உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சர் பொது மக்களை அறிவுறுத்தியிருக்கின்றார்.
கடந்தாண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருந்த போதும் நிலைமை கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
இம்முறையின் முழு MCO அமுலுக்கு வரும் இக்காலகட்டத்தில் உணவு கையிருப்பு நாடு முழுவதும் போதுமானதாக இருக்கும் என அவர் உத்தரவாதம் அளித்தார்.
------
கோவிட் 19 தொடர்வில் நாட்டில் நேற்று பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை எட்டியிருக்கின்றது!
நேற்று ஒன்பதாயிரத்து 20 சம்பவங்கள் பதிவான வேளை, பலி எண்ணிக்கையும் என்றும் இல்லாத அளவுக்கு 98 ஆகப் பதிவாகியிருக்கின்றது.
வழக்கம் போல சிலாங்கூரில் மிக அதிகமாக ஈராயிரத்து 800 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
------
பொது மக்களே தங்களுக்கு வேண்டிய தடுப்பூசியை தேர்வு செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை, மலேசிய மருத்துவச் சங்கம் வரவேற்றுள்ளது.
இது கோவிட் 19 தடுப்பூசியை போட தயங்குபவர்களுக்கு அந்த தடுப்பூசி போட உக்கமூட்டக்கூடியதாக விளங்கும் என, அச்சங்கம் FMT-யிடம் தெரிவித்துள்ளது.
கூடிய விரைவில் MySejahtera செயலியில் பதிபவர்கள் தங்களுக்கு விருப்பமான தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்கும் புதியம் அம்சம் சேர்க்கப்படலாம் என, அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
-----
இதனிடையே 10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் இதுவரை இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு முடித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
17 லட்சம் பேர் முதல் டோசைப் போட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் ஒட்டு மொத்தமாக 1 கோடியே 20 லட்சம் பேர் தடுப்பூசி போட பதிந்து கொண்டுள்ளனர்.
-----
கடந்த வெள்ளிக்கிழமை Kelana Jaya LRT மற்றும் Wangsa Majuவிலிருந்து Kajang செல்லும் MRT ரயில் சேவையைப் பயன்படுத்திய பொது மக்கள் உடனடியாக கோவிட் 19 பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதற்கு முந்தைய நாள் Taman Melati மற்றும் KLCC-யிலிருந்து MRT ரயில் பயன்படுத்திய பயணிகளும் அப்பரிசோதனை மேற்கொள்ளுமாறு அந்த ரயில் சேவை நடத்துனர் நிறுவனம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டது.
அந்த ரயிலைப் பயன்படுத்திய இருவர் தங்களுக்கு கோவிட் 19 இருப்பதாக நிர்வாகத்திடம் தெரிவித்திருப்பதே அதற்குக் காரணம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather