Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஜூன் 1 முதல் பொது முடக்கம்!

May 29, 2021


ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி, 14 நாட்களுக்கு நாடு முழுவதும், முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுல்படுத்தப்படும்.

இந்த பொது முடக்கத்திற்கான காலக்கட்டத்தில், முக்கியமான பொருளாதார மற்றும் சேவைத் துறைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்துள்ளார்.

ஜூன் 1 முதல் பொது முடக்கம்!

அவ்வாறு செயல்பட அனுமதிக்கப்படும் முக்கியமான துறைகள் குறித்த பட்டியலை தேசிய பாதுகாப்பு மன்றம் விரைவில் வெளியிடும்.

மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பொருளாதார துறைகளுக்கும் தேவையான உதவித் திட்டங்கள் குறித்து நிதி அமைச்சு ஆராய்ந்து, அதற்கான தகவல்களை அறிவிக்கும் என்றாரவர்.

இதனிடையே, நாடு COVID-19-னுக்கு எதிரான கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைவதை உறுதிச் செய்ய, வரக்கூடிய வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்றும் Tan Sri Muhyiddin சொன்னார்.

நாட்டில் தினசரி பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டியிருப்பதை அடுத்து, பொது முடக்கத்தை அறிவிக்க முடிவெடுக்கப்பட்டதாக, பிரதமர் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.

ஆகக் கடைசியாக அத்தொற்றுக்கு 61 பேர் பலியாகினர்.

72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

MITI : "எந்த தகவலையும் நாங்கள் இன்னும் வெளியிடவில்லை"!

முழு அளவிலான MCOவின் போது, வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படும் துறைகள் என கூறி, தாங்கள் எந்த தகவலையும் இன்னும் வெளியிடவில்லை என, அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு தெளிவுப்படுத்தியிருக்கின்றது.

அதற்கான பட்டியலை தேசிய பாதுகாப்பு மன்றம் MKN தான் வெளியிடும் என, MITI , டிவிட்டர் பதிவில் கூறியிருக்கின்றது.

"Total Lockdown" அமுலுக்கு வரும் காலக்கட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்படும் துறைகள் என கூறி நேற்றிரவு முழுக்க சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்களை MITI மேற்கோள் காட்டி பேசியது.

 

சபாவிலும் பொது முடக்கம்!

பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ள முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை  சபாவும் பின்பற்றும்.

ஜூன் 1 முதல் பொது முடக்கம்!

சபாவில் நாளுக்கு நாள் பதிவாகும் கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, முழு அளவிலான MCOவை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.

 

சரவாக்கில் பொருளாதார துறைகள் மூடப்படாது!

சரவாக்கில் இன்று முதல் ஜூன் 11 வரை, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமுல்படுத்தும், முடிவு நிலைநிறுத்தப்படுகிறது. 

மத்திய அரசாங்கத்தை பின்பற்றி பொருளாதார துறைகள் மூடப்படாது என, சரவாக் மாநிலம் அறிவித்துள்ளது.

 

மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டம் ஜூனில் தொடங்கும்!

3ஆம் கட்ட COVID-19 தேசிய தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!

ஜூன் 1 முதல் பொது முடக்கம்!

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான அத்திட்டத்தின் வாயிலாக இளையோர் மத்தியில் பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு நம்புகிறது.

மேலும் மக்கள் மத்தியில் தடுப்பூசிக்கான அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதையும் அமைச்சு சுட்டிக் காட்டியது.

இவ்வேளையில், பொது முடக்க காலக்கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என COVID-19 தடுப்பூசி கையிருப்புக்கான உத்தரவாத செயற்குழு கூறியிருக்கின்றது.

 

SOP-களை மீறியதால் வந்த விளைவு!

நோன்புப் பெருநாள் விடுமுறையின் போது SOPகளை மீறியதன் விளைவாக, புதிதாக 24 COVID-19 clusterகள் உருவாகியுள்ளன.

அந்த clusterகளின் கீழ், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூவாயிரத்து 300க்கும் அதிகமானோரில் 850 பேருக்கு COVID-19 தொற்றுப் பீடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காட்டாதவர்களை உட்படுத்தியிருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் கொரோனா சம்பவங்கள் குறைந்து வருகின்றன!

இந்தியாவில் ஆகக் கடைசியாக ஒரு லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜூன் 1 முதல் பொது முடக்கம்!கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையை காட்டிலும் அதில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

90.34% (விழுக்காட்டினர்) அத்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

 இவ்வேளையில், தமிழகத்தில், COVID-19 சீற்றத்தை கட்டுப்படுத்த இம்மாத இறுதி வரை என அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு, ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather