← Back to list
LRT விபத்து: சிறப்பு பணிக்குழு அமைக்கப்படுகிறது!
May 25, 2021
KLCC நிலையம் அருகே, Kelana Jaya LRT-க்கான பாதையில் நேற்றிரவு நிகழ்ந்த இலகு ரயில் விபத்து குறித்து விசாரிக்க, சிறப்பு பணிக் குழு அமைக்கப்படும்.
போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Dr Wee Ka Siong அதனை தெரிவித்துள்ளார்.
“dalam tempoh 2 minggu, task force ini akan mengemukakan hasil siasatan kepada saya. Dalam 2 minggu, kita akan kenal pasti sama ada disebabkan oleh kesilapan sistem signaling, ataupun communication ataupun human error.” (21 secs)
அவ்விபத்து சமிக்ஞை கோளாறினால் ஏற்பட்டதா, அல்லது அதற்கு தகவல் தொடர்பு முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமா, அல்லது மனிதக் கோளாறுகள் காரணமா என்பது ஆழமாக ஆராயப்படும் என்றாவர்.
இரு வாரங்களில் அவ்விசாரணை தொடர்பான முடிவை, அக்குழு வழங்கும் என்றும் அவர் சொன்னார்.
தொடக்க கட்ட விசாரணை அறிக்கை இன்று தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் Dr Wee கூறினார்.
இவ்வேளையில், அவ்விபத்து குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு, பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான அனைவருக்கும் உரிய சிகிச்சைகள், சிறந்த முறையில் வழங்கப்படுவதை அனைத்து தரப்பினரும் உறுதிச் செய்ய வேண்டும் என்றும் Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தினார்.
இது கடந்த 23 ஆண்டுகளில் நாட்டில் LRTயை உட்படுத்தி நிகழ்ந்துள்ள முதல் விபத்தாகும்.
பயணிகள் LRTயும், ஆளில்லா LRTயும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட அவ்விபத்தில், 166 பேர் சிராய்ப்பு காயங்களுக்கு ஆளான வேளை, 47 பேர் படுகாயமுற்றனர்.
மற்றொரு நிலவரத்தில், Kelana Jaya தடத்திற்கான LRT சேவைகள் இன்று காலை 6 மணி தொடங்கி வழக்கம் போல் செயல்படுவதாக Prasarana அறிவித்துள்ளது.
Single track முறையில் அந்த வழித் தடம் செயல்படுகிறது; Pasar Seni - Ampang Park நிலையங்களுக்கிடையிலான இலவச பேருந்து வசதிகளும் செய்து தரப்படுவதாக Prasarana அறிக்கை வழி கூறியிருக்கின்றது.
நேர கட்டுப்பாடு உகந்ததே!
இன்று தொடங்கி, பேரங்காடிகள் உள்ளிட்ட அனைத்து வணிக வளாகங்களிலும் வாடிக்கையாளர்கள் 2 மணி நேரம் மட்டுமே உள்ளே இருக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ள புதிய SOPயை, மலேசியப் பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் FOMCA வரவேற்றுள்ளது.
அதிகரித்து வரும் COVID-19 சம்பவங்களை கட்டுப்படுத்த இது உகந்த நடவடிக்கை தான் என கூறுகின்றார், FOMCA துணைத் தலைவர் Mohd Yusof Abdul Rahman.
“Walaupun mengehadkan masa dan jumlah pelanggan itu akan menyebabkan pelanggan terpaksa beratur lama untuk masuk sesebuah premis, namun ia adalah satu langkah yang perlu dilakukan untuk mengelakkan pengguna berada dalam sesuatu premis lebih lama”
பேரங்காடிகளில் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்க நினைக்கும் பொருட்களை முன்கூட்டியே பட்டியலிட்டு தயார் செய்துக் கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
விசாக தினம்: புத்த வழிப்பாட்டுத் தலங்களுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
நாளை விசாக தினக் கொண்டாட்டத்தின் போது, புத்த வழிப்பாட்டுத் தலங்களுக்குள் நுழைய பக்தர்களுக்கு அனுமதியில்லை என ஒற்றுமை துறை அமைச்சு அறிவித்துள்ளது.
MCO 3.0வுக்கு ஏற்ப, ஒவ்வொரு வழிப்பாட்டுத் தலங்களிலும், காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரைக்கும், ஒரு முறை மட்டுமே வழிபாடுகள் நடத்த அனுமதிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.
COVID-19 தொற்றினால் உயரிய மரணம்!
நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயரிய எண்ணிக்கையாக, நேற்று ஒரே நாளில் 61 பேர் COVID-19 தொற்றுக்கு பலியாகினர்.
அவர்களில் பெரும்பாலானோர், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்ற நாள்பட்ட நோய்களை கொண்டிருந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஈராயிரத்து 309ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மொத்த ஆறாயிரத்து 509 COVID-19 சம்பவங்கள் பதிவாகின.
புதிதாக 20 COVID-19 clusterகள் உருவாகியுள்ளன.
அதில் 8 clusterகள் வேலையிடம் தொடர்பானவை; 6 clusterகள் சமூகப் பரவலை உட்படுத்தியிருக்கின்றன.
3 clusterகள் சமய நடவடிக்கைகள் தொடர்பானவை என சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.
வீடு வீடாகச் சென்று பரிசோதனை!
சிலாங்கூரில், வீடு வீடாகச் சென்றும் COVID-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளும் பரிந்துரை பரிசீலிக்கப்படும் என, மாநில Menteri Besar கூறியுள்ளார்.
வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள தங்களுக்கு மிகப் பெரிய குழு தேவைப்படும்;
எனவே, தன்னார்வலர்கள் உள்ளிட்ட தங்களிடம் உள்ள ஆள்பலத்தை பொறுத்து அந்நடவடிக்கை அமையும் என்றாரவர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather