← Back to list
2 மணி நேரமா? ஏற்புடையதாக இல்லை!
May 24, 2021
பேரங்காடிகளினுள் இருக்க வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 2 மணி நேர கட்டுப்பாடு ஏற்புடையதாக இல்லை என, மலேசிய பேராங்காடிகள் நடத்துநர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேர கட்டுப்பாடு விதிப்பதன் வாயிலாக, மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மைதான்;
ஆனால், பேரங்காடிக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் 2 மணி நேர கட்டுப்பாட்டை முறையாக பின்பற்றுகின்றனரா, இல்லையா என்பதை கண்காணிப்பது சுலபமான காரியமல்ல என அச்சங்கம் கருதுகிறது.
அப்படி ஒருவேளை, வாடிக்கையாளர்கள் அந்த நேர கட்டுப்பாட்டை பின்பற்ற தவறினால், அதற்காக பேரங்காடி நடத்துநர்களையோ அல்லது அதன் வணிகர்களையோ தண்டிப்பது நியாயமாகாது என்றும் அச்சங்கம் கூறியது.
COVID-19 பரவலை கட்டுப்படுத்த நாளை தொடங்கி கடுமையாக்கப்பட்ட SOPகள் நடப்புக்கு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பேரங்காடிகள் உட்பட அனைத்து வணிக மையங்களிலும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் 2 மணி நேரத்திற்கு மட்டுமே உள்ளே இருக்க அனுமதிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது தொடர்பில் அச்சங்கம் கருத்துரைத்தது.
இதனிடையே, இந்த நேர கட்டுப்பாட்டு SOP முறையாக பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய, நாடு முழுவதும் ஈராயிரத்திற்கும் அதிகமான அமுலாக்க அதிகாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர்.
ஆண்டு இறுதிக்குள் கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைய முடியும்!
இவ்வாண்டு இறுதிக்குள் COVID-19 பெருந்தொற்றுக்கு எதிரான கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அடைந்து விட முடியும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்கான கையிருப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட சீக்கிரமே கிடைத்து விடும் என சுகாதார அமைச்சும், தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddinனும் தமக்கு தகவல் தெரிவித்திருப்பதாக Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.
”Diharap sebelum akhir tahun ini, semua rakyat yang patut sudah disuntik akan dapat vaksin. Saya diberitahu oleh KKM dan KJ bahawa mungkin bekalan ini akan sampai lebih cepat. BIla vaksin sampai cepat, lebih banyak orang akan dapat diberikan suntikan”
COVID-19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு முடக்கம் full lockdown அறிவிக்காததற்கான முடிவையும் அவர் தற்காத்துப் பேசியுள்ளார்.
ஏற்கனவே கடந்தாண்டு முதல் முறையாக MCOவை அறிவித்து, அதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வர இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை தவிர்க்கவே இம்முறை அரசாங்கம் முழு முடக்கத்தை அறிவிக்கவில்லை என்றாரவர்.
மேலும் பேசிய அவர், அடிக்கடி SOPகளை மாற்றுவதால் மக்களுக்கு குழப்பமடைய வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை;
ஆனாலும், அந்த SOPகள் எப்போதும் ஒரே மாதிரி இருக்க முடியாது;
கொரோனா பெருந்தொற்றின் இயல்புக்கு ஏற்ப, SOPகளும் அவ்வப்போது மாற்றப்பட வேண்டியிருப்பதாக Tan Sri Muhyiddin தெளிவுப்படுத்தினார்.
”Kalau hari ini ‘A’…besok pulak “A-1”. Kenapa buat begitu? Keadaan berubah. Kita tak static. Kita dinamik. Ikut keadaan dan situatisi yang memerlukan kita membuat adjustment untuk mengatasi situasi yang berbeza-beza”
இவ்வேளையில், நாட்டில் எந்தவொரு தரப்போ அல்லது நிறுவனங்களோ, தங்களுக்கான COVID-19 தடுப்பூசிகளை வாங்க நினைத்தால், அதில் ஆட்சேபம் இல்லை;
ஆனால், அத்தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய, தேசிய மருந்தக ஒழுங்குமுறை நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என Tan Sri Muhyiddin வலியுறுத்தினார்.
ஆகக் கடைசியாக நாட்டில் பதிவான ஆறாயிரத்து 976 சம்பவங்களில், ஈராயிரத்து 200க்கும் அதிகமானவை சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.
அதற்கடுத்த நிலையில், மிக அதிகமான சம்பவங்களை கொண்ட மாநிலங்களாக சரவாக்கும், ஜொகூரும் திகழ்கின்றன.
ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 49 பேர் பலியாகினர்.
57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சிலாங்கூரில் கொரோனா பரிசோதனை நிலவரம்.....
சிலாங்கூரில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 தொற்றுக்கான பேரளவிலான பரிசோதனையில், ஏறக்குறைய 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
சனிக்கிழமை வரை நிலவரப்படி, அவர்களில் ஏறக்குறைய ஆயிரத்து 500க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா கண்டிருக்கலாம் என சந்தேகிகப்படுவதாக மாநில Menteri Besar தெரிவித்துள்ளார்.
COVID-19 தடுப்பூசி: 8 லட்சத்திற்கும் அதிகமானோர் இரு டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர்!
நாட்டில் 8 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமானோர் COVID-19 தடுப்பூசிக்கான இரு டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர்.
COVID-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை ஒரு டோஸ் போட்டுக் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்திற்கும் அதிகம் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதையடுத்து, முதல் மற்றும் 2ஆம் டோஸ் போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 23 லட்சத்து 42 ஆயிரத்து 500ஆக அதிகரித்துள்ளது.
இவ்வேளையில், கொரோனா தடுப்பூசி அதிகம் போட்டுக் கொண்ட மக்களை கொண்ட மாநிலமாக சிலாங்கூர் திகழ்கின்றது.
அதற்கடுத்த நிலையில், சரவாக், கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பேராக்கைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
மற்றொரு நிலவரத்தில், ஜூன் மாத இறுதி வாக்கில், மேலும் 82 லட்சம் SINOVAC (சைனோவெக்) தடுப்பூசிகள் கையிருப்பை மலேசியா பெறும்.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Datuk Seri Ismail Sabri Yaakob அத்தகவலை தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து நேரடியாக 44 லட்சம் தடுப்பூசிகள் தருவிக்கப்படுகின்றன;
மேலும் 38 லட்சம் தடுப்பூசிகள் fill and finish முறையில் உள்நாட்டு மருந்தக நிறுவனத்தில் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் சொன்னார்.
இரு சுவாசக் கவசங்களை அணியும் வழிக்காட்டி!
ஒரே நேரத்தில் இரு சுவாசக் கவசங்களை எவ்வாறு சரியாக அணிவது என்பதற்கான வழிகாட்டி முறையை, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
உள்ளே வழக்கமான சுவாசக் கவசத்தையும், அதன் வெளிப்புறத்தில் துணி வகையிலான சுகாவசக் கவசத்தையும் மக்கள் அணியலாம் என அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
இரு அடுக்கு முறையில் சுவாசக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், அதனைப் பின்பற்ற குறிப்பாக கூட்டம் உள்ள இடங்களில் மக்கள் ஊக்குவிக்கப்படுவதாக அமைச்சு ஏற்கனவே கூறியிருந்தது.
ஒரேயொரு சுவாசக் கவசத்தை அணிவதால் 56 விழுக்காட்டு பாதுகாப்பு கிடைக்கின்றது; ஆனால், இந்த இரு அடுக்கு பயன்பாடு வாயிலாக 85 விழுக்காடு வரை பாதுகாப்பு அதிகரிப்பதாக அமைச்சு தெரிவித்தது.
Osaka-வில் கொரோனா சீற்றம் அதிகரித்துள்ளது!
ஜப்பானின் மிகப் பெரிய நகரமான Osakaவில் COVID-19 தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, அங்குள்ள மருத்துவமனைகளில் கடும் இட நெருக்கடி நிலவுகின்றது.
Image: Reuters
அதே சமயம், அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
உருமாறிய பிரிட்டன் வகை கொரோனா தொற்றினால், Osakaவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால், அங்கு மருத்துவ முறை செயலிழக்கும் சூழ்நிலையை நெருங்கியிருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், தோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டாம் என்றும் அவர்கள் மீண்டும் பரிந்துரைத்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather