Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

COVID-19 தடுப்பூசிக்கான முதல் டோசை அனைவருக்கும் போடுங்கள்!

May 21, 2021


COVID-19 தடுப்பூசிக்கான முதல் டோஸ் அனைத்து மலேசியர்களுக்கும் விரைந்து வழங்கப்பட வேண்டும்!

கடந்த புதன்கிழமையில் இருந்து, நாட்டில் தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை தாண்டியிருப்பதை அடுத்து, மலேசிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத் தலைவர் Datuk Dr Zainal Ariffin Omar அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.

covid-19 தடுப்பூசிக்கான முதல் டோசை அனைவருக்கும் போடுங்கள்! ங்கள்! ம்!

முதல் டோசை முதலில் வழங்குவதன் வாயிலாக, மேலும் அதிகமான உயிர்களை காப்பாற்ற முடியும் என அவர் தெரிவித்தார்.

 அதே சமயம், அத்தடுப்பூசிக்கான 2ஆம் டோஸ் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதையும் அரசாங்கம் உறுதிச் செய்துக் கொள்ள வேண்டும் என்றாரவர்.

இதே போன்று முதல் டோஸ் தடுப்பூசியை முதலில் எல்லா  மக்களுக்கும் போட சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகள் திட்டமிட்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

 

பேரளவிலான கொரோனா பரிசோதனபரிசோதனை வேண்டும்!

நாட்டில் COVID-19 சீற்றத்தை கட்டுப்படுத்த அனைத்து மக்களையும் உட்படுத்தி, பேரளவிலான COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்!

அதுவே இப்போதைக்கு சிறந்த வழி என பரிந்துரைக்கின்றார், மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் பேராசிரியர் Datuk Dr M Subramaniam.

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டமும் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

covid-19 தடுப்பூசிக்கான முதல் டோசை அனைவருக்கும் போடுங்கள்! ங்கள்! ம்!

ஒருவேளை, மருத்துவ துறையில் ஆள்பல பற்றாக்குறை இருந்தால், தனியார் துறை மருத்துவர்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் நாட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் தனியார் துறையில் ஏறக்குறைய எட்டாயிரம் மருத்துவர்கள் இருப்பதையும் அவர் ராகா செய்தியிடம் சுட்டிக் காட்டினார்.

மேலும் பேசிய அவர், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என, நிலைமை மோசமடையும் வரை காத்திருக்காமல், SOPகளை பின்பற்றுவதில் அனைவரும் எந்த நேரமும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் Dr Subramaniam வலியுறுத்தினார்.

கொரோனா தொற்றில் இருந்து நாட்டை முழுமையாக விடுவிக்க, ஒவ்வொரு தனிமனிதனும், சுய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்ற  வேண்டும் என சுகாதார அமைச்சு வழங்கியிருந்த ஆலோசனையையும் அவர் வரவேற்றார்.

உதாரணத்திற்கு, வீட்டிற்கு தேவையான மளிகை மற்றும் உணவுப் பொருட்களை வாங்க அடிக்கடி வெளியே செல்வதை தவிர்த்து, ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை திட்டமிட்டு ஒரு நாளில் வாங்குவது, வாகனத்திற்கு தேவையான அளவு எரிபொருளை நிரப்பிக் கொள்வது போன்ற ஆலோசனைகளை, சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah  முன்னதாக வழங்கியிருந்தார்.

நாட்டில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஆறாயிரத்து 806 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று 59 பேர் அத்தொற்றுக்கு பலியாகினர்; மலேசியாவில் கொரோனாவால் ஒரு நாளில் இவ்வளவுப் பேர் பலியாகியிருப்பது இதுவே முதன் முறை.

 

சிலாங்கூரில் கொரோனா சம்பவங்கள் அதிகம் பதிவாக காரணம் என்ன?

கடந்த இரு நாட்களாக சிலாங்கூரில் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை ஈராயிரத்தை கடந்துள்ளன.

அதற்கு, அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பேரளவிலான கொரோனா தொற்றுப் பரிசோதனை முக்கிய காரணம் என கூறுகின்றார், சுகாதார துறை முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் Datuk Dr Rohaizat Yon. 

அது தவிர்த்து, உலகளவில் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, உருமாறிய கொரோனா தொற்றுப் பரவல், SOPகளை தொடர்ந்து பின்பற்றுவதில் சிலர் காட்டும் மெத்தனம் உள்ளிட்ட காரணங்களும் அதில் அடங்கும் என்றாரவர்.

covid-19 தடுப்பூசிக்கான முதல் டோசை அனைவருக்கும் போடுங்கள்! ங்கள்! ம்!

மேலும் பேசிய அவர், பேரளவிலான கொரோனா தொற்றுப் பரிசோதனைகள் மிகச் சரியான நடவடிக்கை என தெரிவித்தார்.

 ஒருவேளை, பேரளவிலான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றால், கொரோனா சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து, அங்கு மட்டும் முதலில் பரிசோதனைகள் நடத்தலாம் என அவர் ஆலோசனைக் கூறினார்.

இதன் வழி, பரிசோதனைக்கான செலவினத்தை கட்டுப்படுத்தலாம் என்றாரவர்.

 

SOP மீறல்? காவல் துறை விசாரணை! 

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவர் SOPகளை மீறியிருப்பதாக கூறப்படும் புகார் குறித்து, காவல் துறை விசாரிக்கின்றது.

அரசாங்கத்தின் அறிவிப்பையும் மீறி அவர் தனது வீட்டில் நோன்பு பெருநாள் விருந்துபசரிப்பை நடத்தியதாக கூறப்படுகிறது.

அது தொடர்பான புகைப்படம், Whatsappபில் பகிரப்பட்டு வருவதை Kuala Langat மாவட்ட காவல் துறை தலைவர் மேற்கோள் காட்டியிருக்கின்றார்.

 

இந்தியாவில் 50% மக்கள் சுவாசக்  கவசம் அணிவதில்லை! அதிர்ச்சித் தகவல்! 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கவலையளிக்கும் வகையில் இருந்தாலும், அந்நாட்டு மக்களில் 50 விழுக்காட்டினர் இன்னமும் சுவாசக் கவசம் அணிவதில்லை!

இந்திய சுகாதார அமைச்சு அந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது; அப்படியே அணிந்தாலும் கூட, பலர் அதனை முறையாக அணிவதில்லை.

covid-19 தடுப்பூசிக்கான முதல் டோசை அனைவருக்கும் போடுங்கள்! ங்கள்! ம்!

சுமார் 64 விழுக்காட்டு மக்கள் மூக்கிற்கு கீழே தான் சுவாசக் கவசத்தை அணிவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மூக்கு - வாய் இரண்டையும் முழுமையாக மூடியிருக்கும் வகையில் தான் சுவாசக் கவசத்தை அணிய வேண்டும்; மூக்கிற்கு கீழே சுவாசக் கவசத்தை அணிவதால் எவ்வித பலனும் இல்லை என ஓராண்டாகவே கூறி வந்தாலும், இன்னமும் பலர் அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்து இந்திய சுகாதார அமைச்சு ஏமாற்றம் தெரிவித்தது.

 

கருப்பு பூஞ்சை - இந்தியாவை மிரட்டும் புதிய தொற்று நோய்!

இந்தியாவில் புதிதாக பரவ தொடங்கியிருக்கும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கும் முன், அதற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யுமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா 2ஆம் கட்ட பரவல் மோசமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மத்தியில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருவது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கருப்பு பூஞ்சை நோயை, தொற்று நோய் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather