Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

புதிய உச்சத்தை தொட்ட COVID-19 மரண எண்ணிக்கை!

May 19, 2021


ஏப்ரல் மாதம் தொடங்கி, தினசரிப் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, நாட்டின் சுகாதார துறைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கின்றது!

எனவே, இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO காலத்தில், சுயக் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொண்டு, கொரோனா பெருந்தொற்றை முற்றாக அழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, சுகாதார தலைமை இயக்குநர் Tan Sri Dr Noor Hisham Abdullah வலியுறுத்தியுள்ளார்.

புதிய உச்சத்தை தொட்ட covid-19 மரண எண்ணிக்கை!

கொரோனா சீற்றத்தில் இருந்து ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்வதை தவிர  தற்போதைக்கு வேறு வழியில்லை என்றாரவர்.

நாட்டில் தினசரி கொரோனா சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து 4 இலக்கத்தில் பதிவாகி வருகின்றது.

சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்து, COVID-19 தனிமைப்படுத்தும் மையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கூட கூடியப்பட்சம் நிரம்பி விட்டதை அவர் குறிப்பிட்டார்.

கொரோனா மரண எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது இன்னும்  கவலையளிப்பதாக Dr Noor Hisham சொன்னார்.

புதிய உச்சத்தை தொட்ட covid-19 மரண எண்ணிக்கை!

எனவே, அவசர மற்றும் அவசிய தேவைகள் இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்குமாறு அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

வேலையிடங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, தங்களது தொழிலாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய முதலாளிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வேளையில், நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 47 பேர் COVID-19 தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதையடுத்து மொத்த மரண எண்ணிக்கை ஈராயிரத்தை நெருங்கியுள்ளது.

ஆகக் கடைசியாக 4 ஆயிரத்து 865 பேருக்கு அத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதில், ஆயிரத்து 743 சம்பவங்கள் சிலாங்கூரில் உள்ளவர்களை உட்படுத்தியிருக்கின்றது.

 

தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளி ஆராயப்படுகிறது!

சிங்கப்பூரைப் போன்று, மலேசியாவிலும் COVID-19 தடுப்பூசிக்கான இரு டோஸ்களையும் போட்டுக் கொள்ளும் கால இடைவெளியை அதிகரிக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்படுகின்றது.

புதிய உச்சத்தை தொட்ட covid-19 மரண எண்ணிக்கை!

அதன் தொடர்பில், தடுப்பூசி உற்பத்தியாளர்களின் கருத்துகள் பெறப்பட்டு வருவதாக, தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddin கூறியுள்ளார்.

இவ்வாறு செய்வதன் வாயிலாக, மேலும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசைப் போட்டுக் கொண்டு, அத்தொற்றிலிருந்த  தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என சிங்கப்பூர் கூறியிருந்தது.

புதிய உச்சத்தை தொட்ட covid-19 மரண எண்ணிக்கை!

ஆகக் கடைசி நிலவரப்படி, சிங்கப்பூரில் முதல் டோஸ் மற்றும் 2ஆம் டோசைப் போட்டுக் கொள்ள நிர்ணயிக்கப்பட்டிருந்த 3 முதல் 4 வாரங்கள் கால இடைவெளி, 6 முதல் 8 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 

கடும் எச்சரிக்கை!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான SOPகளை மீறி அல்லது, பொய்யான அனுமதிக் கடிதங்களை காட்டி மாவட்ட - மாநில எல்லைகளை கடந்துச் செல்ல முயற்சிப்பவர்கள் மீது கரிசனம் காட்டப்படாது!

புதிய உச்சத்தை தொட்ட covid-19 மரண எண்ணிக்கை!

அப்படிப்பட்டவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய காவல் படைத் தலைவர் எச்சரித்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather