Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

AstraZeneca தடுப்பூசிக்கான இரண்டாம் கட்டப் பதிவு!

May 17, 2021


astrazeneca தடுப்பூசிக்கான இரண்டாம் கட்டப் பதிவு!

AstraZeneca தடுப்பூசியைத் தன்னார்வ முறையில் போட்டுக் கொள்வதற்கான இரண்டாம் கட்டப் பதிவு நடவடிக்கை இம்மாதம் 23 ஆம் தேதியில் இருந்து 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

முதல் கட்டப் பதிவின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளரான Khairy Jamaluddin தெரிவித்தார்.

அதோடு இம்முறை தன்னார்வ முறையிலான AstraZeneca தடுப்பூசித் திட்டம் ஜொகூர், பினாங்கு, சரவாக் என மூன்று மாநிலங்களுக்கு  விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் Pfizer தடுப்பூசி மட்டுமே பயன்படுத்தப்பட உகந்ததாக இருக்கும் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமான Khairy சொன்னார்.  

astrazeneca தடுப்பூசிக்கான இரண்டாம் கட்டப் பதிவு!

நாட்டில் AstraZeneca தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இதுவரை யாருக்கும் மோசமான பக்க விளைவுகள் இல்லை. 

இருப்பினும் இந்தோனேசியாவில் அத்தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆடவர் மரணமடைந்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து ஆய்வு செய்து வருவதாக தடுப்பூசி பெறுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு தெரிவித்தது. 

நாட்டில் கடந்த ஐந்தாம் தேதியில் இருந்து தன்னார்வ முறையில் முன் வந்தவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

astrazeneca தடுப்பூசிக்கான இரண்டாம் கட்டப் பதிவு!

சிலாங்கூர் மாநிலத்தில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCOயை அமல்படுத்த அல்லது தர செயல்பாட்டு நடைமுறை SOPயை மேலும் கடுமையாக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.

சிலாங்கூர் மாநில அரசு Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அவ்வாறு செய்யப்படலாம் என அமைச்சு கோடி காட்டியது.

astrazeneca தடுப்பூசிக்கான இரண்டாம் கட்டப் பதிவு!

சிலாங்கூர் அரசு தனது மாநில மக்களுக்காகக் கூடுதலாக தடுப்பூசி வழங்குவதாக வெளிவந்துள்ள தகவல் உண்மையில்லை. 

SElangkah செயலி வாயிலாக Sinovac தடுப்பூசிப் போட்டுக் கொள்ள பதிந்து கொள்ளலாம் எனக் கூறப்படுவதையும் அது மறுத்தது.  

astrazeneca தடுப்பூசிக்கான இரண்டாம் கட்டப் பதிவு!

நாட்டில் புதிதாக நாலாயிரத்து 446 Covid-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மிக அதிகமாக ஆயிரத்து 650 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather