Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஏழு லட்சம் பேர் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்!

May 14, 2021


 

ஏழு லட்சம் பேர் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்!

Covid-19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் சுமார் ஏழு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசிக்கான இரு டோஸ்களையும் போட்டு முடித்துள்ளனர்.

11 லட்சத்துக்கு 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதல் டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் தனது Twitter-ரில் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டு மொத்தமாக 19 லட்சத்துக்கும் கூடுதல் பேர் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் தகவலையும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 41 புள்ளி 6 விழுக்காட்டினர் தங்களைப் பதிந்து கொண்டுள்ளதாகவும் Tan Sri Dr Noor Hisham Abdullah தெரிவித்தார்.
 

----- 

இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி நேற்று வரை Covid-19 SOPக்களை மீறியதற்காக சுமார் மூவாயிரத்து 885 அபராதங்களை ஜொகூர் காவல் துறை வெளியிட்டுள்ளது.

இந்த நோன்பு பெருநாள் சமயத்தில் அதிகமான SOP மீறல்கள் எதுவும் இல்லை என மாநில காவல் துறை தலைவர் தெரிவித்தார்.

சாலையில் அதிக வாகனங்கள் இல்லை என்றும் தெரிவித்த அவர், மாநில எல்லைகளைக் கடக்கும் முயற்சிகளும் குறைவே என்றும் சொன்னார்.

---- 

நோன்பு பெருநாளின் போது சமூக வலைத்தள பதிவுகளையும் தமது தரப்பு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக நெகிரி செம்பிலான் காவல் துறை தெரிவித்தது.

சாலைகளின் மட்டும் கண்காணிப்புப் பலப்படுத்தப்படாது; இணையத் தளங்கள் வாயிலாகவும் SOPக்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை தமது தரப்பு உறுதிச் செய்யும் என அது கூறியது.

SOP மீறல் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பதிவை ஏற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை மேலும் சொன்னது.

----

மலாக்கா, Alor Gajah-வில் நோன்பு பெருநாள் முதல் நாளன்று தனது வீட்டில் கூட்டம் நிரைந்திருந்ததால், அதன் உரிமையாளாருக்கு 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் விசாரித்து வருவதாகத் தெரிவித்த மாவட்ட காவல் துறை தலைவர், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்.

---- 

கெடா, Alor Setar-ரில் அந்தரங்க விருந்து நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பதின்ம வயது பெண் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பதை அடுத்து, சம்பந்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட ஒன்பது பேரைக் காவல் துறை கைது செய்துள்ளது.

அப்பெண்ணின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், பிரேத பரிசோதனை முடிவுக்காகத் தாங்கள் காத்திருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather