← Back to list
மக்களின் நலனை முன்னிறுத்திய முடிவு!
May 13, 2021
நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் இச்சமயத்தில் நாடளாவிய நிலையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO அமல்படுத்தப்பட்டிருப்பது, மக்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட முடிவு.
எனவே அதனைக் கொடூரமான ஒன்றாகக் கருத வேண்டாம் என பிரதமர் Tan Sri Muhyiddin Yassin கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மைய காலமாக தினசரி Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் கூடுதலாகப் பதிவாகி வருகின்றன.
எனவே Covid-19 பரவலை வேரறுக்க, திடமான மேலும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
சமூகத்தின் மத்தியில் Covid-19 பரவுவதைத் தடுக்க, நோன்புப் பெருநாளை காலம் நெடுகிலும் தேசிய பாதுகாப்பு மன்றம் MKN நிர்ணயித்துள்ள தர செயல்பாட்டு நடைமுறைகள் SOPக்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
தற்போது உருமாறிய கிருமித் தொற்றுப் பரவல் கவலையளிக்கும் வகையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி சுகாதாரத் தலைமை இயக்குனர் Tan Sri Dr Noor Hisham Abdullah அவ்வாறு வலியுறுத்தினார்.
எனவே நோன்புப் பெருநாள் சமயத்தில் கல்லறைகளுக்குச் செல்வதையும் ஒருவர் மற்றொருவர் வீட்டுக்குச் செல்வதையும் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பத்திரங்கள் போலியாக்கப்படுவதைத் தடுக்க, PDRM, மாநிலம் கடப்பதற்கான விண்ணப்ப முறையை மேம்படுத்தவிருக்கிறது.
MCO அமலுக்கு வந்ததில் இருந்து சிலர் போலி பத்திரங்களைக் கொடுத்து மாநிலம் கடக்க முயன்று வருவதைச் சுட்டிக் காட்டி தேசிய காவல் படைத் தலைவர் அவ்வாறு கூறினார்.
நோன்புப் பெருநாளைக் கொண்டாட பலர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வரும் நிலையில், காவல் துறையின் சாலைத் தடுப்புச் சோதனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
Covid-19 பரவலைக் கட்டுப்படுத்த போராடி வரும் அரசாங்கத்தின் உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிச் செய்ய அதனைத் தவிர வேறு வழியில்லை என Bukit Aman விளக்கியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather