← Back to list
பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்!
May 12, 2021
COVID-19 பெருந்தொற்று நாட்டில் பரவி ஓராண்டுக்கும் மேல் கடந்து விட்டது!
ஆனாலும் அதன் சீற்றம் இன்னும் தணியவில்லை.
இக்காலக்கட்டத்தில், மருத்துவ முன்களப் பணியாளர் என்ற முறையில், புதிய வழமைகள் பழக்கப்பட்டு விட்டாலும், எப்போது பழைய வாழ்க்கைக்கு திரும்பு முடியும் என்ற ஏக்கத்தில் தாம் இருப்பதாக கூறுகின்றார், பேரா, தாப்பாவைச் சேர்ந்த தாதி கோகிலா எல்லப்பன்.
மருத்துவமனையில் COVID-19 நோயாளிகளை உட்படுத்திய தனது அன்றாடப் பணி குறித்து விவரித்த அவர்…
"நான் கிருமித் தொற்று கட்டுப்பாட்டு பிரிவில் பணிப் புரிகின்றேன். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கான SOPகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பது தான் எனது முக்கிய பணி. உதாரணத்திற்கு, ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவர் நடந்துச் செல்லும் பாதை, அவர் பயன்படுத்திய மின் தூக்கி மற்றும் அவரை அழைத்து வந்த ambulance வாகனம் ஆகியவை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முறையாக சுத்த செய்யப்படுகின்றதா என்பதை பரிசோதிக்க வேண்டும். பின்னர், மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கான PPE உடைகள், கிருமி நாசினி திரவங்கள் போதிய அளவில் இருக்கின்றதா என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்; சில நேரங்களில் கூடுதல் வேலைகள் இருப்பின் என பணி முடிய நள்ளிரவுக் கூட ஆகலாம்; சில சமயங்களில் அதிகாலை 3 மணி வரையிலும் கூட வேலை செய்துள்ளேன். இந்த சூழ்நிலையில் எனக்கு மிகவும் ஆதரவாக இருப்பது என் கணவம், அப்பா-அம்மாவும் தான். எனக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். வேலை முடிந்து தாமதமாக வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலைகளில் அவர்கள் தான் பிள்ளைகளை கவனித்துக் கொள்வார்கள்; பணிச் சுமை காரணமாக சில நேரங்களில் என் பிள்ளைகளை பார்க்ககூட முடியாத சூழ்நிலை கூட ஏற்பட்டுள்ளது" என கோகிலா தெரிவித்தார்.
அவசியம் இல்லாத பட்சத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களுக்கு செல்வது, நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகளை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
"அவசியம் இல்லை என்றால் தயவு செய்து யாரும் வெளியில் செல்லாதீர்கள். அப்படி செல்வதாக இருந்தால், முகக் கவசம் அணியுங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லாதீர்கள். முடிந்த வரை, விருந்து விழாக்களுக்கு குறிப்பாக சிவப்பு மண்டலங்களில் உள்ள பகுதிகளுக்கும் செல்வதை தவிர்த்துஹ் விடுங்கள். நானும் இந்த SOPயை தான் பின்பற்றகிறேன்.நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து COVID-19 தொற்றை அடியோடு விரட்டி, பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம்" என கூறி முடித்தார்.
இன்று கொண்டாடப்படும் அனைத்துலக தாதியர் தினத்தை ஒட்டி கோகிலா ராகா செய்தியுடன் பேசினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather